40Mpbs டேட்டா மெர்சல் காட்டும் Airtel நிறுவனத்தின் 699 திட்டம்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 27 டிசம்பர் 2024 10:50 IST
ஹைலைட்ஸ்
  • Zee5 OTT 1.5 லட்சம் மணிநேர திரைப்படம், வீடியோக்களை கொண்டுள்ளது
  • இந்த திட்டத்தில் Disney+ Hotstar, Netflix மற்றும் பல OTT இலவசமாக வருகிறது
  • Airtel Wi-Fi திட்டங்கள் பயனர்களுக்கு 40Mbps முதல் 1Gbps வரையிலான வேகத்தை

ஏர்டெல் வைஃபை திட்டங்கள் ரூ. 699 பயனர்கள் அனைத்து Zee5 உள்ளடக்கத்தையும் அணுக அனுமதிக்கும்

Photo Credit: GooglePlay

வெறும் ரூ.699 மதிப்பிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல் நிறுவனம். இந்த திட்டத்தில் 40 எம்பிபிஎஸ் டேட்டா, 350-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 22 ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷனையும் ஏர்டெல் கொடுக்கிறது. இப்போது இதனுடன் ஸ்ட்ரீமிங் தளமான Zee5 இணைவதாக அறிவித்துள்ளது. மற்ற நிறுவன திட்டங்களுடம் ஒப்பிடுகையில், ரிலையன்ஸ் ஜியோ ரூ. 599ல் போஸ்ட்பெய்டு வைஃபை திட்ட பயனர்களுக்கு இலவச Zee5 சந்தாக்களை வழங்குகிறது. ஏர்டெல் பிராட்பேண்ட் பயனர்கள், திட்டத்தைப் பொறுத்து ஏற்கனவே Disney+ Hotstar, Netflix மற்றும் பல ஸ்ட்ரீமிங் இணையதளங்களை இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர்.


ஏர்டெல் பிராட்பேண்ட் பயனர்களுக்கு இலவச Zee5 சந்தா


ஏர்டெல் சமீபத்தில் Zee5 உடன் இணைந்து அதன் அனைத்து உள்ளடக்கத்தையும் Airtel Wi-Fi திட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.699 முதல் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தச் சலுகை ரூ. 899, ரூ. 1,099, ரூ. 1,599, மற்றும் ரூ. 3,999 திட்டங்களுக்கும் பொருந்தும்.


வாடிக்கையாளர்கள் ரூ. 699 மற்றும் ரூ. 899 திட்டங்களும் இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப்ஷனை பெறுகின்றன. அதே நேரத்தில் ரூ. 1,099 திட்ட பயனர்கள் இலவச Amazon Prime அணுகலை அனுபவிக்க முடியும். ரூ.1,599 மற்றும் ரூ.3,999 ஏர்டெல் வைஃபை திட்டங்களில் நெட்ஃபிளிக்ஸ் இலவச அணுகலும் அடங்கும். அனைத்து திட்டங்களிலும் 20க்கும் மேற்பட்ட மற்ற OTT இயங்குதளங்களுக்கான இலவச சந்தாக்கள் அடங்கும்.


OTT தளங்களுக்கான இலவச அணுகலைத் தவிர, இந்த Airtel Wi-Fi திட்டங்கள் பயனர்களுக்கு 40Mbps முதல் 1Gbps வரையிலான வேகத்தை வழங்குகின்றன, மேலும் 350 க்கும் மேற்பட்ட HD மற்றும் SD TV சேனல்களைப் பார்க்க அனுமதிக்கின்றன. வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் அல்லது ஏர்டெல் இந்தியா இணையதளத்தில் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் திட்டங்களைப் பெறலாம்.
Zee5 உடனான இந்த வசதி மூலம் ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் சாம் பகதூர், RRR, Sirf Ek Bandaa Kaafi Hai, Manorathangal, Vikkatakavi மற்றும் பிற பிரபலமான படங்களை இலவசமாக பார்க்கலாம். பயனர்கள் அனைத்து நிகழ்ச்சிகள், OTT திரைப்படங்கள், டிவி தொடர்கள் மற்றும் அனைத்து பிற வீடியோக்களை ஒரே இடத்தில் பார்க்கலாம். ஒரே செலவில் டேட்டா, டிவி மற்றும் ஓடிடி கிடைப்பதால், கஸ்டமர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இதனால், புதிய ஓடிடி ஆப்களை ஏர்டெல் சேர்க்க தொடங்கி இருக்கிறது.


இலவச OTT தளங்கள் வரிசையில் சன்நெக்ஸ்ட் (SunNxt), ஈராஸ்நவ் (ErosNow), ஆஹா (AHA), சோனிலிவ் (SonyLiv), எபிக் ஆன் (Epic On), டாகுபே (Docubay), மனோரமா மேக்ஸ் (Manorama Max), ஹோய்சோய் (HoiChoi), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), ஈராஸ் நவ் (Eros Now), அல்ட்ரா (Ultra), டிவோ (DIVO), ஷீமாரூமீ (Shemaroome) மற்றும்ஃபேன் கோட் (Fan Code) போன்ற ஆப்களும் இந்த சந்தாவில் கிடைக்கும். இது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே மூலம் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: , Zee5, Airtel
 ...மேலும்
        
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 13: புதிய பச்சை நிறத்தில் ஜூலை 4-ல் லான்ச்! Snapdragon 8 Elite SoC, 120W சார்ஜிங்குடன் மாஸ்!
  2. AI+ Nova 5G, Pulse: ஜூலை 8-ல் மாஸ் லான்ச்! ₹5,000-க்கு 5G போன்? 50MP கேமராவுடன் வருகிறது!
  3. Vodafone Idea அதிரடி: இனி Family Plan-ல Netflix இலவசம்! டேட்டா, OTT பலன்கள் அள்ளி வழங்கும் Vi!
  4. அறிமுகமாகிறது Tecno Pova 7 Ultra 5G: Dimensity 8350, 144Hz AMOLED, 6000mAh பேட்டரியுடன் வருகிறது!
  5. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  6. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  7. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  8. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  9. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  10. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.