ஏர்டெலில் 48 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி டேட்டாவுக்குப் பதிலாக 4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது
குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த ஆஃபர் வழங்கப்படுகிறது
ஏர்டெல் நிறுவனம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாட்களுக்கு 1ஜிபி டேட்டா இலவசமாக வழங்குகிறது.
ஏர்டெல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு தற்போது சிறப்பு ஆஃபர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 48 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 1ஜிபி கூடுதல் டேட்டா பெற முடியும். பொதுவாக 48 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி டேட்டா வழங்கப்படும். ஆனால், தற்போது கூடுதலாக 1ஜிபி டேட்டா வழங்கப்பட்டு, 4ஜிபி டேட்டாவாக வழங்கப்படுகிறது.
இந்த ஆஃபர் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் இல்லை. சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஏர்டெல் தரப்பில் ஆஃபர் மெசேஜ் வரும். அவர்கள் இந்தச் சலுகையைப் பெற முடியும். மேலும், இவ்வாறு வழங்கப்படும் 1ஜிபி கூடுதல் டேட்டா ஆஃபரின் வேலிடிட்டி 3 நாட்கள் ஆகும். எனவே, இந்த ஆஃபர் பெறும் வாடிக்கையாளர்கள் மூன்று நாட்கள் வரையில் 1ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த முடியும். ஏர்டெலின் இந்த ஆஃபர் ஜியோவின் டேட்டா ஆஃபரை ஒத்துக் காணப்படுகிறது.
இது குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதால், மற்ற வாடிக்கையாளர்கள் 48 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 3ஜிபி டேட்டா மட்டுமே பெற முடியும். மாறாக 4ஜிபி டேட்டா பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெலில் இதே போல் 49 ரூபாய்க்கான ரீசார்ஜ் பேக் உள்ளது. அதில் 38.52 ரூபாய்க்கு டாக் டைம், 100MB டேட்டா வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திலும் 1 ஜிபி ஆஃபர் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Halo Studios Reportedly Has Around 30 Employees Left After Layoffs as Activision Takes Charge of Franchise