பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை மாலை வெளியிட்ட தகவல் படி, இந்தியாவில் இயங்கும் இன்டேன் நிறுவனத்தின் சுமார் 67 லட்ச வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான இந்த ஏரிவாயு நிறுவனத்தை, இந்தியாவில் இருக்கும் பல கோடி மக்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பாப்டிஸ்டி ராபர்ட் என்னும் இந்த நபர் இணையத்தில் எலியட் ஆல்டர்சன் என்ற பெயரில் ஆதார் கார்டுகளின் செய்தி கசிவுகளை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.
‘உள்ளூர் விநியோகிஸ்தர்கள் ஆதார் எண்களை சரிவர கையாளாத நிலையில், இன்டேன் நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களின் பெயர், வீட்டு முகவரி போன்ற முக்கிய தகவல்கள் பாதுகாப்பில்லாமல் இருக்கிறது' என ஆல்டர்சன் கூறினார்.
சிறப்பு தரவுதளம் கொண்டு தகவல்களை ஆல்டர்சன் சேகரிக்க முயன்றபோது அவருக்கு சுமார் 11,000 விநியோகிஸ்தர்களின் முக்கிய தகவல்கள் கிடைத்து குறிப்பிடத்தக்கது. அதன் பிறகே ஆல்டர்சனின் ஐ.பி முகவரி தடை செய்யப்பட்டது.
‘நான் பைத்தானில் ஸ்கிரிப்ட் எழுதி அதை செயல்படுத்தும்போது சுமார் 11,062 நபர்களின் தகவல்கள் கிடைத்தது. சில நாட்களுக்குள் சுமார் 9,490 விநியோகிஸ்தர்களின் தகவல்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது' என ஆல்டர்சன் கூறியுள்ளார்.
மேலும் அந்த ஆராய்ச்சியாளரின் ஸ்கிரிப்ட் தடை செய்யப்படுவதற்கு முன், சுமார் 58 லட்ச இன்டேன் வாடிக்கையாளர்களின் தகவல் வந்துள்ளது.இன்டேன் மற்றும் ஆதார் Unique Identification Authority of India (UIDAI) இந்த சம்பவத்தை பற்றி இன்னும் கருத்தை தெரிவிக்கவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்