ஸ்மார்ட்போன் மட்டுமல்ல அதுக்கும் மேல.... இந்தியாவில் வெளியான சாம்சங் Gadgets!

ஸ்மார்ட்போன் மட்டுமல்ல அதுக்கும் மேல.... இந்தியாவில் வெளியான சாம்சங் Gadgets!

One UI உடன் Android 9 Pie-யால் Samsung Galaxy Tab S6 இயங்குகிறது

ஹைலைட்ஸ்
  • Snapdragon 855 SoC-யால் Samsung Galaxy Tab S6 இயங்கும்
  • Samsung Galaxy Watch 4G, இரண்டு அளவுகளில் வருகிறது
  • இந்த மூன்று சாதனங்களும் அக்டோபர் 11 தேதி விற்பனைக்கு வரும்
விளம்பரம்


Samsung வியாழக்கிழமையன்று இந்தியாவில் புதிய டேப்லெட் மற்றும் இரண்டு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகப்படுத்தியது. புதிய Samsung Galaxy Tab S6, Galaxy Watch Active 2 ஆகியவை இந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் Galaxy Watch 4G கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டு இந்தியா வெளியீட்டைப் பெற ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. 

இந்தியாவில் Samsung Galaxy Tab S6, Galaxy Watch Active 2, Galaxy Watch 4G-யின் விலை:

Samsung Galaxy Tab S6, Galaxy Watch Active 2, Galaxy Watch 4G ஆகியவை இந்தியாவில் நாளை முதல் விற்பனைக்கு வரும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது. இந்த மூன்று சாதனங்களும் அமேசான், பிளிப்கார்ட், சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டின் ஆஃப்லைன் சாம்சங் பார்ட்னர் கடைகள் வழியாக விற்பனை செய்யப்படும். விலையைப் பொறுத்தவரை, Samsung Galaxy Tab S6-ன் விலை ரூ. 59.900. Samsung Galaxy Watch LTE-யின் 42mm பதிப்பிற்கு ரூ. 28,490  மற்றும் 46mm பதிப்பிற்கு ரூ. 30,990 ரூபாயாகும். கடைசியாக, Samsung Galaxy Watch Active 2-ன் aluminium body model-க்கு விலை 26,990 ரூபாயகவும், stainless-steel body model-க்கு ரூ. 31,990 ரூபாயாகவும் உள்ளது. இது நாட்டில் 44mm பதிப்பில் மட்டுமே வெளியிடப்படும்.

Samsung Galaxy Tab S6 மவுண்டன் கிரே மற்றும் கிளவுட் ப்ளூ வண்ணங்களில் வழங்கப்படும். Samsung Watch Active 2 ஸ்டீல் சில்வர், பிளாக் மற்றும் கோல்ட் ஃபினிஷ்களில் வருகிறது. அதேசமயம், Watch Active 2 அலுமினியம் பிளாக், ரோஸ் கோல்ட் மற்றும் கிளவுட் சில்வரில் வருகிறது.

Samsung Galaxy Tab S6-ற்காக சாம்சங் பல வெளியீட்டு சலுகைகளையும் அறிவித்துள்ளது. டேப்லெட் வாங்குபவர்களுக்கு எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தினால் ரூ. 5,000 கேஷ்பேக் கிடைக்கும். 

Samsung Galaxy Tab S6 விவரக்குறிப்புகள்:

Samsung Galaxy Tab S6, One UI உடன் Android 9 Pie இயங்குகிறது. இது 10.5-inch WQXGA (2560x1600 pixels) Super AMOLED display உடன் HDR10 ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இது 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டு Qualcomm Snapdragon 855 SoC-யால் இயக்கப்படுகிறது.

சாம்சங் டேப்லெட்டில், இரட்டை பின்புற கேமரா அமைப்புடன், 13 மெகாபிக்சல் ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் ஷூட்டரும் உள்ளது. டேப்லெட்டில் செல்ஃபிக்களுக்காக 8 மெகாபிக்சல் கேமரா முன்புறத்தில் உள்ளது. Samsung Galaxy Tab S6, 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. மேலும், microSD card slot (up to 1TB) ஸ்டோரேஜ் விரிவாக்கத்தை ஆதரிக்கிறது.

மற்ற விவரக்குறிப்புகளில், இது in-display fingerprint sensor, 7,040 எம்ஏஎச் பேட்டரி மற்றும் S Pen stylus-கான ஆதரவைக் கொண்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் ஸ்டைலஸில் 0.35mAh பேட்டரி உள்ளது. இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11ac, 4G LTE மற்றும் Bluetooth 5.0ஆகியவை அடங்கும். Samsung Galaxy Tab S6 244.5x159.5x5.7mm அளவிடும் மற்றும் 420 கிராம் எடை கொண்டது.

samsung galaxy watch lte g360 Samsung Galaxy Watch 4G

42mm and 46mm ஆகிய அளவுகளில் Samsung Galaxy Watch 4G வருகிறது.


Samsung Galaxy Watch 4G விவரக்குறிப்புகள்

Samsung Galaxy Watch 46mm வேரியண்ட்டில் 360x360 pixels resolution கொண்ட 1.3-inch Super AMOLED display இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் 42mm வேரியண்ட்டில் அதே 360x360 pixels resolution கொண்ட 1.2-inch Super AMOLED display உள்ளது. இரண்டு அளவுகளும் 22mm interchangeable strap ஆதரிக்கின்றன.

Samsung Galaxy Watch LTE 1.5 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு dual-core Samsung Exynos 9110 SoC-யால் இயக்கப்படுகிறது. இணைப்பு விருப்பங்களில் 3G/LTE, Bluetooth v4.2, Wi-Fi b/g/n, NFC, and A-GPS ஆகியவை அடங்கும். போர்டில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light sensor, barometer, gyroscope மற்றும் heart rate monitor ஆகியவை அடங்கும்.

samsung galaxy watch active 2 g360 Samsung Galaxy Active 2

single 44mm அளவில் Samsung Galaxy Active 2  வருகிறது.

Samsung Galaxy Watch Active 2 விவரக்குறிப்புகள்

Samsung Galaxy Watch Active 2 இந்தியாவில் 44mm திரை அளவிலேயே வருகிறது. இருப்பினும் aluminium and stainless-steel case வகைகளில் இதை வாங்கலாம். 44mm மாடல் 360x360 pixels resolution உடன் 1.4-inch round Super AMOLED display மற்றும் பாதுகாப்பிற்கு Corning Gorilla Glass DX+ கவருடன் வருகிறது. smartwatch is IP68 சான்றிதழ் பெற்றது.

இது 1.5 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு Exynos 9110 பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. Galaxy Watch Active 2-ன் பெசல்கள் தொடு உணர் கொண்டவை. பயனர்கள் ஸ்மார்ட்வாட்சின் UI உடன் விரல்களை, கடிகார திசையில் அல்லது எதிர்-கடிகார திசையில் நகர்த்துவதன் மூலம் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. மேலும், heart-rate sensor, ECG sensor, accelerometer, gyroscope, barometer மற்றும் ambient light sensor ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Galaxy Watch Active 2-வை, Bluetooth 5.0 வழியாக இணைப்பதன் மூலம், பயனர்கள் குரல் அழைப்பிற்கு பதிலளிக்க அனுமதிக்கிறது. இது 340mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »