நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Poco Pad 5G டேப்லெட் பற்றி தான்.
Poco Pad 5G இந்தியாவில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. டேப்லெட் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 2 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் உடன் வந்துள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு மற்றும் குவாட் ஸ்பீக்கர் அமைப்புடன் 12.1 இன்ச் எல்சிடி திரையை கொண்டுள்ளது. டேப்லெட் Dolby Vision மற்றும் Dolby Atmos ஆதரவுடன் வருகிறது. இது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 10,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. நீர் மற்றும் தூசி எதிர்பிற்கான IP52 மதிப்பீடு பெற்று Poco Smart Pen மற்றும் Poco கீபோர்டுக்கான வசதியுடன் வருகிறது.
8GB of LPDDR4X ரேம் மற்றும் 256GB UFS 2.2 ஸ்டோரேஜ் இருக்கிறது. இந்த டேப்லெட் சாதனம் 8MP முன்பக்க மற்றும் பின்புற கேமராவை கொண்டிருக்கும்.
இந்தியாவில் Poco Pad 5Gயின் ஆரம்ப விலை ரூ. 8GB ரேம் + 128GB மெமரி மாடல் 23,999 ரூபாய் விலையில் கிடைக்கிறது. 8GB ரேம் + 256GB மெமரி மாடல் விலை 25,999 ரூபாய் விலையில் கிடைக்கிறது. கோபால்ட் ப்ளூ மற்றும் பிஸ்தா கிரீன் வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. Flipkart வழியாக ஆகஸ்ட் 27 அன்று மதியம் 12pm IST மணிக்கு விற்பனை தொடங்கும் . SBI, HDFC மற்றும் ICICI வங்கி பயனாளர்களுக்கு ரூ. 3,000 தள்ளுபடி கிடியாக்கும். மாணவர்களுக்கு கூடுதல் ரூ. 1,000 தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகைகள் விற்பனையின் முதல் நாளுக்கு மட்டுமே பொருந்தும்.
Poco Pad 5G ஆனது 12.1-இன்ச் 2K எல்சிடி திரையை கொண்டுள்ளது. இது 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 16:10 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 600 நைட்ஸ் பீக் பிரைட்னஸ் லெவலைக் கொண்டுள்ளது. வீடியோ சப்போர்ட் TÜV Rheinland டிரிபிள் சான்றிதழ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வருகிறது.
8GB LPDDR4X ரேம் மற்றும் 256GB வரை UFS 2.2 மெமரியுடன் இணைக்கப்பட்ட Snapdragon 7s Gen 2 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக சேமிப்பகத்தை 1.5TB வரை விரிவாக்கலாம். இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் உடன் வந்துள்ளது.
கேமராவை பொறுத்தவரையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Poco Pad 5G LED ஃபிளாஷ் யூனிட்டுடன் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது. முன் கேமரா, வலது பக்கம் வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு கேமரா 8 மெகாபிக்சல் சென்சாருடன் வருகிறது.
Poco Pad 5G ஆனது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP52 மதிப்பிடப்பட்ட கட்டமைப்புடன் வருகிறது. இது குவாட்-ஸ்பீக்கர் சிஸ்டம், இரண்டு மைக்ரோஃபோன்கள், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டேப்லெட் டால்பி விஷன் ஆதரவுடன் வருகிறது.
Poco டேப்லெட்டில் 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 10,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இரட்டை 5ஜி, வைஃபை 6, ஜிபிஎஸ் மற்றும் புளூடூத் 5.2 ஆகியவற்றுடன் USB டைப்-சி போர்ட் இருக்கிறது. 568g எடையுடையதாக உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்