5,180mAh பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகமான லெனோவா டேப் V7, விலை என்ன?

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 26 ஜூலை 2019 14:28 IST
ஹைலைட்ஸ்
  • 3GB மற்றும் 4GB என இரு வகைகளில் இந்த டேப்லெட் அறிமுகம்
  • 13 மெகாபிக்சல் பின்புற கேமராவை கொண்டுள்ளது இந்த டேப்லெட்
  • ஸ்னெப்ட்ராகன் 450 ப்ராஸசரை கொண்டுள்ளது

லெனோவா டேப் V7 இந்த ஆண்டின் தொடக்கத்தில் மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

'லெனோவா டேப் V7' டேப்லெட் கடந்த வியாழக்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. டேப்லெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள் 6.9-இன்ச் FHD திரை, செல்லுலார் இணைப்பு வசதி, 30 மணிநேர பேச்சு நேரத்தை வழங்கக்கூடிய ஒரு பெரிய 5,180mAh அளவு பேட்டரி, 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா. 'லெனோவா டேப் V7' டேப்லெட்டின் விலை ரூ. 12,990. முன்னதாக, லெனோவா டேப் V7 "டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்-இன்-ஒன்" என இந்த ஆண்டின் தொடக்கத்தில் மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

'லெனோவா டேப் V7' விலை மற்றும் விற்பனை!

லெனோவா டேப் V7 டேப்லெட் இந்தியாவில்  இரண்டு வகைகளில் அறிமுகமாகியுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு லெனோவா டேப் V7 டேப்லெட் 12,990 ரூபாய் என்ற விலையிலும், மற்றும் 4GB RAM + 64GB சேமிப்பு அளவு லெனோவா டேப் V7 டேப்லெட் 14,990 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது. இந்த டேப்லெட் ஆகஸ்ட் 1 முதல் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரவுள்ளது. விரைவில் அமேசான், லெனோவா உள்ளிட்ட பிற தளங்களிலும், க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் விஜய் சேல்ஸ் உள்ளிட்ட கடைகளிலும் கிடைக்கவுள்ளது.

'லெனோவா டேப் V7' சிறப்பம்சங்கள்!

6.9-இன்ச் FHD திரை, 1080x2160 பிக்சல்கள், 18:9 திரை விகிதம், 81 சதவிகித திரை-உடல் விகிதம் என்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த டேப்லெட் குவால்காம் ஸ்னெப்ட்ராகன் 450 ப்ராஸசரை கொண்டுள்ளது. 64GB வரை சேமிப்பு அளவை கொண்டுள்ள இந்த டேப்லெட்டில் 128GB வரையில் சேமிப்பை கூட்டிக்கொள்ளலாம்.

இந்த டேப்லெட் 13 மெகாபிக்சல் பின்புற கேமராவையும், 5 மெகாபிக்சல் முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. 4G வசதியை கொண்டுள்ளது இந்த 'லெனோவா டேப் V7'. பயனர்கள் அழைப்புகள், மெசேஜ் என அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

5,180mAh அளவு பேட்டரியை கொண்டுள்ளது இந்த 'லெனோவா டேப் V7' டேப்லெட்.

 
KEY SPECS
Display 6.90-inch
Processor Qualcomm Snapdragon 450
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5180mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2160 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் மோட்டோரோலா Edge 70 Pro, ஒன்பிளஸ் Nord 6 மற்றும் ரெட்மி Note 15 Pro+: விலை & சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  2. இந்தியாவில் போட் Aavante Prime X சவுண்ட்பார் அறிமுகம்: டால்பி அட்மாஸ் & வயர்லெஸ் ஸ்பீக்கர்களுடன் அதிரடி விலை!
  3. சென்ஹைசர் CX 80U, சென்ஹைசர் HD 400U USB டைப்-C இணைப்புடன் இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  4. ஓபன்ஏஐ மேம்பட்ட பட உருவாக்கம் மற்றும் பகுத்தறியும் திறன்களுடன் ChatGPT Images 2.0-ஐ அறிமுகப்படுத்தியது
  5. ஆசஸ் எக்ஸ்பர்ட் புக் அல்ட்ரா: இன்டெல் கோர் அல்ட்ரா சிபியு மற்றும் AI அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்!
  6. விவோ X300 அல்ட்ரா மற்றும் X300 FE: மே 6-ல் இந்திய அறிமுகம்; பிரம்மாண்ட கேமரா மற்றும் முக்கிய அம்சங்கள் இதோ!
  7. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ: 6500mAh பேட்டரி மற்றும் 50MP சோனி கேமராவுடன் இந்தியாவில் அதிரடியாக அறிமுகம்!
  8. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ்: புதிய சிப்செட், 50MP கேமரா மற்றும் வியக்கவைக்கும் சிறப்பம்சங்களுடன் அறிமுகம்!
  9. டைமன்சிட்டி 9500 சிப், 8,550mAh பேட்டரியுடன் ரெட்மி K90 மேக்ஸ் அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள் இதோ
  10. 200MP கேமரா, 7025mAh பேட்டரியுடன் ஒப்போ ஃபைண்ட் X9s ப்ரோ அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.