Tablet வாங்க இதுதான் சரியான நேரம்! Amazon Great Indian Festival Sale 2025-ல் Apple முதல் Samsung வரைSpecial Discounts

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 23 செப்டம்பர் 2025 09:33 IST
ஹைலைட்ஸ்
  • Amazon Great Indian Festival Sale 2025, செப்டம்பர் 23 அன்று தொடங்குகிறது
  • Apple iPad 11, OnePlus Pad 3, Xiaomi Pad 7 உள்ளிட்ட முன்னணி Tablets-களுக்
  • SBI மற்றும் ICICI வங்கி கார்டுகளுக்கு 10% வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும்

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025: பிரைம் உறுப்பினர்களுக்கு 24 மணி நேர முன்கூட்டியே பிரத்யேக அணுகல் கிடைக்கும்

பண்டிகை காலம் ஆரம்பிச்சாச்சு, ஆஃபர்களும் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு! இந்த வருஷம் Amazon-ன் பிரம்மாண்டமான Amazon Great Indian Festival Sale 2025, செப்டம்பர் 23-ஆம் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது. இந்த விற்பனையில ஸ்மார்ட்போன்களைத் தாண்டி, டேப்லெட் மார்க்கெட்டையும் அதிர வைக்கிற மாதிரி நிறைய சலுகைகளை அறிவிச்சிருக்காங்க. கல்வி, கேமிங், பொழுதுபோக்குன்னு எல்லாத்துக்கும் பயன்படுற டேப்லெட்களுக்கு பல பிராண்டுகள்ல இருந்தும் சூப்பரான ஆஃபர் கிடைக்குது.இந்த விற்பனையில பிரீமியம் பிராண்டுகள்ல இருந்து பட்ஜெட் பிராண்டுகள் வரை எல்லா Tablets-க்கும் தள்ளுபடி இருக்கு.

  • Apple iPad 11: Apple-ன் லேட்டஸ்ட் iPad 11 (A16 chip) மாடல், அதோட ஒரிஜினல் விலை ரூ. 34,900-ல இருந்து வெறும் ரூ. 33,999-க்கு கிடைக்குது. இது ஒரு நல்ல சலுகை.
  • OnePlus Pad 3: இந்த பவர்ஃபுல் டேப்லெட்டின் ஒரிஜினல் விலை ரூ. 49,999. இந்த ஆஃபர்ல இது ரூ. 47,999-க்கு கிடைக்குது.
  • Xiaomi Pad 7: மிட்-ரேஞ்ச் பிரீமியம் டேப்லெட்டான Xiaomi Pad 7-க்கு, நல்ல தள்ளுபடி கொடுக்கப்பட்டிருக்கு. இதன் ஒரிஜினல் விலை ரூ. 30,999. இது இப்போது ரூ. 22,999 என்ற விலையில் கிடைக்கிறது.மற்ற முன்னணி பிராண்டுகளுக்கும் தள்ளுபடி!
  • இந்த பிராண்டுகள் மட்டுமல்லாம, Samsung, Redmi, Lenovo போன்ற பிராண்டுகளுக்கும் அட்டகாசமான தள்ளுபடி இருக்கு.
  • Samsung Galaxy Tab S9: Samsung-ன் ஃபிளாக்ஷிப் டேப்லெட்டான Galaxy Tab S9-க்கு ஒரு பெரிய விலை குறைப்பு இருக்கு. இதன் ஒரிஜினல் விலை ரூ. 81,999. இப்போ இந்த ஆஃபர்ல வெறும் ரூ. 35,999-க்கு கிடைக்கும்னு சொல்லப்படுது. இது ஒரு பெரிய டீல்.
  • Samsung Galaxy Tab S9 FE: இந்த மாடல், ரூ. 44,999 விலையிலிருந்து ரூ. 34,999-க்கு கிடைக்கும்.
  • Redmi Pad Pro 5G: இந்த டேப்லெட்டின் விலை ரூ. 29,999-லிருந்து ரூ. 25,906-க்கு குறைஞ்சிருக்கு.
  • Lenovo Tab M11: இது ஒரு Budget Tablet-ஆ இருந்தாலும், இதுல பேனா (Pen) வசதியோட வருது. இதன் ஒரிஜினல் விலை ரூ. 31,000. இப்போ இது வெறும் ரூ. 13,990-க்கு கிடைக்குது. இது மாணவர்கள் மற்றும் பட்ஜெட் கஸ்டமர்களுக்கு ஒரு சரியான சாய்ஸ்.

இந்த தள்ளுபடிகள் போக, SBI மற்றும் ICICI வங்கி கார்டுகளுக்கு 10% வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதுபோல, பழைய டேப்லெட்களை எக்ஸ்சேஞ்ச் பண்ணும்போது கூடுதல் தள்ளுபடியும் பெறலாம். கல்வி, வேலை, மற்றும் பொழுதுபோக்கிற்கு ஒரு புதிய டேப்லெட் வாங்கணும்னு நினைச்சிருந்தா, இந்த Amazon Great Indian Festival 2025 விற்பனை ஒரு சரியான வாய்ப்பு. இந்த ஆஃபர்களை பயன்படுத்திக்கிட்டு, உங்க தேவையை பூர்த்தி செய்யுங்க.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon Great Indian Festival Sale 2025, iPad 11, OnePlus Pad 3

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டைமன்சிட்டி 9500 சிப், 8,550mAh பேட்டரியுடன் ரெட்மி K90 மேக்ஸ் அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள் இதோ
  2. 200MP கேமரா, 7025mAh பேட்டரியுடன் ஒப்போ ஃபைண்ட் X9s ப்ரோ அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள்
  3. வாட்ஸ்அப் பிளஸ் சந்தா: இது என்ன, விலை, அம்சங்கள் மற்றும் நன்மைகள்
  4. விவோ X300 FE இந்திய அறிமுகத் தொகுப்பு: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  5. ஓப்போ என்கோ கிளிப் 2 மற்றும் வாட்ச் X3 மினி அறிமுகம்: 40 மணிநேர பேட்டரி மற்றும் ஓப்பன்-இயர் வடிவமைப்பு
  6. ஒப்போ F33 ப்ரோ 5G விமர்சனம்: ரூ. 40,000-க்கு கீழ் உள்ள மிகச்சிறந்த வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன் இதுதானா?
  7. ரெட்மி பட்ஸ் 8 அறிமுகம்: 50dB ANC மற்றும் 44 மணிநேர பேட்டரி பேக்கப் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  8. இந்தியாவில் ரெட்மி A7 Pro 4G மற்றும் ரெட்மி A7 4G அறிமுகம்: Unisoc T7250 சிப்செட், விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  9. இந்தியாவில் விவோ போன்களின் விலை ரூ.4000 வரை உயர்வு: Vivo T5x, V70, Y31 5G ஆகியவற்றின் புதிய விலை விவரங்கள் இதோ
  10. மோட்டோரோலா ரேஸர் 2026, ரேஸர்+ 2026 அறிமுக தேதி, விலை மற்றும் சிறப்பம்சங்கள் கசிவு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.