ஹேக் செய்யப்பட்ட அமிதாப் பச்சனின் ட்விட்டர் கணக்கு!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 11 ஜூன் 2019 16:52 IST
ஹைலைட்ஸ்
  • அமிதாப் பச்சனின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த துருக்கிய ஹேக்கர்கள்
  • 'லவ் பாகிஸ்தான்' என பதிவு
  • இந்த தாக்குதலில் இருந்து அரை மணி நேரத்தில் கணக்கு மீட்டெடுப்பு

Photo Credit: Twitter

கடந்த திங்கட்கிழமையின் இரவில், பாலிவுட்டின் மெகாஸ்டார் என அழைக்கப்படும் அமிதாப் பச்சனின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இந்த செயலில் ஈடுபட்டது துருக்கிய ஹேக்கர் குழுவை சேர்ந்த அயில்திஷ் டிம் (Ayyildiz Tim) என்பவர்தான் என்று தகவல் கிடைத்துள்ளது. 

இவரது கணக்கை ஹேக் செய்து,  இவரது சுயவிவர படத்தை மாற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் புகைப்படத்தை வைத்துள்ளனர். மேலும், ஒரு பதிவில் 'லவ் பாகிஸ்தான்' என்ற தலைப்பில் பாகிஸ்தான் பிரதமரின் படத்தை பதிவிட்டுள்ளனர். 

மும்பை காவல்துறையின் செய்தி தொடர்பாளர் இது குறித்து பிடிஐ-க்கு அளித்த தகவலின்படி, இந்த சம்பவம் குறித்து சைபர் துறைக்கு தகவல் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரித்து வருகிறோம். முன்னதாக அமிதாப் பச்சனின் ட்விட்டர் கணக்கின் கவர் படத்தை மாற்றி, விமானத்தின் மேல் கழுகு உள்ளது போன்ற அந்த அமைப்புடைய லோகோவை வைத்திருந்தது. 

ஹேக் செய்த பிறகு, திங்கட்கிழமையன்று இரவு 11:40 மணிக்கு இந்த கணக்கில் இருந்து முதல் ட்வீட்டை பதிவு செய்கிறார்கள் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள். அந்த ட்வீட்டில்,"மொத்த உலகத்திற்கும் ஒரு முக்கியமான அழைப்பு. துருக்கிய கால்பந்து வீரர்களுக்கு எதிராக ஐஸ்லாந்து குடியரசுயின் தவரான நடத்தைகளுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். நாங்கள் மென்மையாக இந்த சைபர் தாக்குதல் குறித்து கூறுகிறோம். இப்படிக்கு அயில்திஷ் டிம், துருக்கிய சைபர் படை", என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மற்றுமொரு ட்வீட்டை பதிவு செய்த இந்த அமைப்பு, தனது இன்ஸ்டாகிராம் கணக்கின் லின்கை பதிவிட்டு, "நாங்கள் உங்கள் ஆதரவிற்காக காத்திருக்கிறோம்." என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த தாக்குதலில் இருந்து ஆமிதாப் பச்சனின் கணக்கு அரை மணி நேரத்தில் மீட்டெடுக்கப்பட்டது. இந்த அமைப்பு முன்னதாக நடிகர்களான சாஹித் கபூர், அனுபம் கீர் ஆகியோரின் கணக்குகளை ஹேக் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amitabh Bachchan, Twitter
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ₹12,000 பட்ஜெட்ல ஒரு பவர்ஃபுல் போன்! Lava Play Max வருது! டிசம்பர்ல லான்ச்!
  2. 200MP கேமரா இனி பட்ஜெட்ல! Redmi Note 16 Pro+ லீக்ஸ் பார்த்தா, Xiaomi ஃபேன்ஸ்க்கு ட்ரீட் தான்
  3. புது Tablet வாங்க ரெடியா? OnePlus Pad Go 2-க்கு FCC சர்ட்டிபிகேட் கிடைச்சிருச்சு! 5G வசதி இருக்காம்
  4. புது வாட்ச் வேணுமா? ₹3,000 ரேஞ்சில் மாஸ் காட்டுது Realme Watch 5
  5. 7000mAh-க்கு ₹15,999! Realme P4x 5G-ன் விலை கசிந்தது! வாங்குறதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சிக்கோங்க
  6. iPhone Air-க்கு Reliance Digital-ல் ₹13,000 தள்ளுபடி: புதிய விலை ₹1,09,990
  7. X-ல் Following Feed-ஐ Grok AI வரிசைப்படுத்தும்: X Premium விலை குறைப்பு
  8. ഐഫോൺ 16 സ്വന്തമാക്കാൻ ഇതാണു മികച്ച അവസരം; ആമസോൺ ബ്ലാക്ക് ഫ്രൈഡേ സെയിലിലെ ഓഫറുകൾ അറിയാം
  9. Nothing Phone 3a Lite: ₹20,999 விலையில் 50MP கேமராவுடன் இந்தியால லான்ச்!
  10. ஆப்பிள் ஸ்டோர் நொய்டா: டிசம்பர் 11 லான்ச்! மும்பை அடுத்த ஆண்டு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.