நிலாவை செல்ஃபி எடுத்த விண்கலம்..! #ViralPhoto

நிலாவை செல்ஃபி எடுத்த விண்கலம்..! #ViralPhoto

Photo Credit: AFP

இஸ்ரேலைத் தொடர்ந்து விரைவில் இந்தியாவும் சந்திராயன் –2வை நிலாவுக்கு அனுப்ப உள்ளது

விளம்பரம்

பூமியில் செல்ஃபி எடுப்பது எல்லாம் பழைய ரகம். நிலாவில் சென்று செல்ஃபி எடுப்பதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்ட்.

இஸ்ரேலிய விண்கலம்தான் நிலா சென்று ஒரு கூல் செல்ஃபி எடுத்து அனுப்பியுள்ளது.

இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரியும் என்ஜிஓ ஸ்பேஸ்ஐஎல்-ம் சேர்ந்துதான் இந்த ஆளில்லா விண்கலத்தை அமெரிக்காவின் ஃப்ளோரிடாவின் கேப் கானவெரலில் இருந்து பிப்ரவரி 22 ஆம் தேதி அனுப்பியது.

585 கிலோ எடை கொண்ட பெரிஷீட் என்னும் பெயருடைய இந்த விண்கலம், எலான் மஸ்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் நிலாவிற்கு அனுப்பப்பட்டது.

பூமியை பின்னணியில் வைத்து பெரிஷீட் விண்கலம் செல்ஃபி எடுத்து அந்த செல்ஃபியை 37,600 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இஸ்ரேலிய மிஷன் கண்ட்ரோலுக்கு அனுப்பியுள்ளது.

இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா மட்டுமே நிலாவில் வெற்றிகரமாக விண்கலத்தை இறக்கியுள்ளனர்.

பைபில், குழந்தைகளின் ஓவியம், இஸ்ரேல் பாடல்கள் மற்றும் இஸ்ரேலிய கொடியை டிஜிட்டல் வடிவத்தில் இந்த விண்கலம் கொண்டு சென்றுள்ளது.

இஸ்ரேலைத் தொடர்ந்து விரைவில் இந்தியாவும் சந்திராயன் –2வை நிலாவுக்கு அனுப்ப உள்ளது.

2020-2021 காலக்கட்டத்தில் ஸ்லிம் என்னும் சிறிய லூனார் லாண்டரை ஜப்பான், நிலாவுக்கு அனுப்ப உள்ளது.

மற்ற நாடுகளை மிஞ்சும் வகையில் நாசா ஒரு திட்டம் வைத்துள்ளது. கேட்வே என்னும் சிறிய விண் தளத்தை  நிலாவின் ஆர்பிட்டில் 2026 ஆம் ஆண்டுக்குள் உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2030 ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கும் மனிதனை அனுப்பும் திட்டம் தீட்டியுள்ளது நாசா.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Israel, Moon
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »