சாம்சங் கேலக்ஸிஎம் 10 மற்றும் எம் 20 ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் அத்துடன் நெடுநாட்களாக எதிர்பாக்கப்பட்டிருக்கும் கேலக்ஸி எம் வகை போன்களும் அறிமுகப்படுத்தப்படுமா என்ற எதிர்பார்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
இன்று மாலை 6 மணி அளவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அமேசான் மற்றும் சாம்சங்கின் ஆன்லையின் ஸ்டோர்களில் ‘நோட்டிஃவை மீ ' என்னும் நினைவூட்டலுக்கான அமைப்பும் அடங்கிவுள்ளது. இந்தியாவில் முதலில் வெளியாகும் இந்த கேலக்ஸி வகை போன்கள் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வெளியாகவுள்ளது.
இதுவரை பல தகவல்கள் கசிந்துள்ள நிலையில் இந்த எம்-சீரிஸ் ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்பு மக்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் கேலக்ஸி எம் 10-னின் 2 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூபாய் 7,990 க்கு விற்பனைக்கு வரவுள்ள நிலையில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி நினைவகத்தை கொண்ட போனுக்கு 8,990 க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் 3ஜிபி ரேமும் 32 ஜிபி நினைவகத்தை கொண்டசாம்சங் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன் 12,990 க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும் அண்டிராய்டு 8.1 ஓரியோ வில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 6.2 இஞ்சு அளவு ஸ்கீரிண் உடையது. இரண்டு கேமராக்களுடன் 13 மெகா பிக்சல் கேமராவுடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 160 கிராம் எடை மற்றும் 3,400 mAh பேட்டரி பவருடன் வெளியாகுகிறது.
அதுபோல் சாம்சங் கேலக்ஸி எம்20 அண்டிராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது. மேலும் 6.3 இஞ்சு உயரமுள்ள இந்த ஸ்மார்ட்போன் 3 மற்றும் 4 ஜிபி ரேம் வசதிகளுடன் வெளியாகுகிறது. 32 மற்றும் 64 ஜிபி நினைவகம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மைக்கிரோ கார்ரடு வசதியுடன் 5,0000mAh பேட்டரி பவருடன் வெளியாகுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்