'இன்ஃபினிட்டி யூ டிஸ்பிளே' கொண்டு அறிமுகமாகும் சாம்சங் தயாரிப்புகள்!

விளம்பரம்
Written by Gaurav Shukla மேம்படுத்தப்பட்டது: 26 பிப்ரவரி 2019 13:01 IST
ஹைலைட்ஸ்
  • சாம்சங் ஏ50 மற்றும் ஏ30 போன்களும் ஆக்டா கோர் பிராசஸ்சருடன் வெளியீடு
  • இரண்டு போன்களின் விலை பட்டியல் இன்னும் அறிமுகமாகவில்லை
  • சாம்சங் ஏ வரிசை போன்கள் இந்தியாவில் பிப்ரவரி 28 ஆம் தேதி அறிமுகம்

இரண்டு போன்களுமே 6.4 இஞ்ச் திரை மற்றும் அமோலெட் இன்ஃபினிட்டி-யூ டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் நடந்து கொண்டிருக்கும் 'உலக மொபைல் காங்கிரஸ் 2019' நிகழ்ச்சியில் பல முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. உலகமெங்கும் இருக்கும் தொழிநுட்பப் பிரியர்களிடையே இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை பல நிறுவனங்கள் தங்களது போன்களை அறிமுகம் செய்துவரும் நிலையில் சாம்சங் தனது ஏ வகை தயாரிப்புகளான சாம்சங் கேலக்ஸி ஏ30 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ50 ஆகிய இரண்டு போன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ50 அமைப்புகள்:

சாம்சங் நிறுவனம் சார்பில் வெளியான அறிக்கையின் படி தற்போது வெளியாகியுள்ள கேலக்ஸி ஏ50,  6.4 இஞ்ச் நீளமுள்ள சூப்பர் அமோலெட் (இன்ஃபினிட்டி-யூ) முழு ஹெச்டி திரையை கொண்டுள்ளது.

மேலும் இந்த கேலக்ஸி ஏ50 4 மற்றும் 6 ஜிபி ரேம்களும் 64 மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 4,000mAh பேட்டரி மற்றும் பெயர் வெளியிடப்படாத ஆக்டா கோர் பிராசஸ்சார் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாருடன் வெளியாவதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேமரா வசதிகள் பொருத்தவரை இந்த கேலக்ஸி ஏ50 வகை ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமராக்களும், அவைகளில் 25 / 8 / 5 மெகா பிக்சல் சென்சார்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்ஃபி கேமரா பொருத்தவரை 25 மெகா பிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.


சாம்சங் கேலக்ஸி ஏ30  அமைப்புகள்:

சாம்சங் கேலக்ஸி ஏ50 போனில் இருக்கும் 6.4 இஞ்ச் நீளமுள்ள சூப்பர் அமோலெட் (இன்ஃபினிட்டி-யூ) முழு ஹெச்டி திரையை போல சாம்சங் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போனும் கொண்டுள்ளது. பெயரிடப்படாத ஆக்டா-கோர் பிராசஸ்சர் இந்த போனில் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த போனில் 3/4 ஜிபி ரேமும் 32/64 ஜிபி சேமிப்பு வசதி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த போனிலும் 4,000mAh பேட்டரி உள்ள நிலையில் பின்புறத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் அமைந்துள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சமாக ஃபேஸ் லாக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேமரா வசதிகள் பொருத்தவரை, பின்புறம் இரண்டு கேமராக்கள் அமைந்துள்ளது. 16 மற்றும் 5 மெகா பிக்சல் கேமரா சென்சார்கள் பின்புறத்தில் அமைந்துள்ள நிலையில் முன்புறத்தில் 16 மெகா பிக்சல் கேமரா அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இப்படி இரண்டு போன்கள் இதுவரை அறிமுகமாகி இருக்கின்ற நிலையில் விலை மற்றும் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks great
  • Very good display
  • Impressive battery life
  • Useful camera features
  • Bad
  • Bloatware and spammy notifications
  • Low-light camera performance could be better
 
KEY SPECS
Display 6.40-inch
Front Camera 25-megapixel
Rear Camera 25-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vivid Super AMOLED display
  • Up-to-date software
  • Solid battery life
  • Built well
  • Bad
  • Weak speaker
  • Fingerprint sensor isn’t easily accessible
  • Underwhelming cameras
  • Processor not competitive enough at the price
  • Sluggish face recognition
 
KEY SPECS
Display 6.40-inch
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  2. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  3. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
  4. கனவு விலையில் Vivo V50 5G! Flipkart-ல் மெகா டிஸ்கவுண்ட்.. 6000mAh பேட்டரி, Zeiss கேமரா இப்போ இவ்வளவு கம்மி விலையிலா?
  5. இனி பிளாக்ஷிப் போன் பட்ஜெட் விலையில்! Samsung Galaxy S24 FE இப்போ Amazon-ல் செம சீப்.. மிஸ் பண்ணிடாதீங்க
  6. ஸ்மார்ட்போன் ஹிஸ்டரிலயே இப்படி ஒரு பேட்டரியா? 7,400mAh உடன் மிரட்டும் iQOO 15 Ultra! கேமர்களுக்கு இதுதான் இனி ஒரே சாய்ஸ்
  7. பிக்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Google Pixel 10a எப்போ வருது தெரியுமா? டிசைன் மற்றும் கலர் டீசர் ரிலீஸ்
  8. விவோவோட அடுத்த தரமான போன் ரெடி! Geekbench-ல் மிரட்டும் Vivo V70 Elite.. பட்ஜெட்ல ஒரு பிளாக்ஷிப் போனா?
  9. விலை குறைந்தது OnePlus 13! பிளிப்கார்ட்டில் ரூ.12,000 வரை சேமிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு. ஆஃபரை எப்படி பெறுவது?
  10. S26 Ultra-வோட புது கலர்ஸ் பார்த்தீங்களா? சாம்சங் ரசிகர்களுக்குப் பிடிச்ச அந்த ஒரு கலர் திரும்ப வருது! டிசைன்லயும் பெரிய மாற்றம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.