சாம்சங் நிறுவனம் சார்பாக தனது ஏ வரிசை போன்கள் 'உலக மொபைல் காங்கிரஸ்' 2019-ல் அறிமுகம்!
இரண்டு போன்களுமே 6.4 இஞ்ச் திரை மற்றும் அமோலெட் இன்ஃபினிட்டி-யூ டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் நடந்து கொண்டிருக்கும் 'உலக மொபைல் காங்கிரஸ் 2019' நிகழ்ச்சியில் பல முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. உலகமெங்கும் இருக்கும் தொழிநுட்பப் பிரியர்களிடையே இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை பல நிறுவனங்கள் தங்களது போன்களை அறிமுகம் செய்துவரும் நிலையில் சாம்சங் தனது ஏ வகை தயாரிப்புகளான சாம்சங் கேலக்ஸி ஏ30 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ50 ஆகிய இரண்டு போன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
![]()
சாம்சங் நிறுவனம் சார்பில் வெளியான அறிக்கையின் படி தற்போது வெளியாகியுள்ள கேலக்ஸி ஏ50, 6.4 இஞ்ச் நீளமுள்ள சூப்பர் அமோலெட் (இன்ஃபினிட்டி-யூ) முழு ஹெச்டி திரையை கொண்டுள்ளது.
மேலும் இந்த கேலக்ஸி ஏ50 4 மற்றும் 6 ஜிபி ரேம்களும் 64 மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 4,000mAh பேட்டரி மற்றும் பெயர் வெளியிடப்படாத ஆக்டா கோர் பிராசஸ்சார் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாருடன் வெளியாவதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேமரா வசதிகள் பொருத்தவரை இந்த கேலக்ஸி ஏ50 வகை ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமராக்களும், அவைகளில் 25 / 8 / 5 மெகா பிக்சல் சென்சார்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்ஃபி கேமரா பொருத்தவரை 25 மெகா பிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ50 போனில் இருக்கும் 6.4 இஞ்ச் நீளமுள்ள சூப்பர் அமோலெட் (இன்ஃபினிட்டி-யூ) முழு ஹெச்டி திரையை போல சாம்சங் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போனும் கொண்டுள்ளது. பெயரிடப்படாத ஆக்டா-கோர் பிராசஸ்சர் இந்த போனில் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த போனில் 3/4 ஜிபி ரேமும் 32/64 ஜிபி சேமிப்பு வசதி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த போனிலும் 4,000mAh பேட்டரி உள்ள நிலையில் பின்புறத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் அமைந்துள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சமாக ஃபேஸ் லாக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேமரா வசதிகள் பொருத்தவரை, பின்புறம் இரண்டு கேமராக்கள் அமைந்துள்ளது. 16 மற்றும் 5 மெகா பிக்சல் கேமரா சென்சார்கள் பின்புறத்தில் அமைந்துள்ள நிலையில் முன்புறத்தில் 16 மெகா பிக்சல் கேமரா அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி இரண்டு போன்கள் இதுவரை அறிமுகமாகி இருக்கின்ற நிலையில் விலை மற்றும் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iPhone 18 Pro, iPhone 18 Pro Max Sale Today: India Price, Offers, and Everything Else You Need to Know