Samsung Galaxy A30s-ன் ஒரே 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ. 1,000 குறைக்கப்பட்ட பிறகு, ரூ. 14,999-யாக உள்ளது.
Samsung Galaxy A30s இந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
இந்தியாவில் Samsung Galaxy A30s மற்றொரு விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. இந்த போன் செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நவம்பரில் விலைக் குறைப்பைப் பெற்றதோடு, இப்போது இரண்டாவது விலைக் குறைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Samsung Galaxy A30s-ன் ஒரே 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ. 1,000 குறைக்கப்பட்ட பிறகு, ரூ. 14,999-யாக உள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, கேஜெட்ஸ் 360-க்கு நிரந்தர விலைக் குறைப்பு என்பதை சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த புதிய விலை Amazon India, Samsung online store மற்றும் Croma-வில் பிரதிபலிக்கிறது. மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம், புதிய விலை இப்போது ஆஃப்லைன் கடைகளிலும் நேரடியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த போனை Prism Crush Violet, Prism Crush Black மற்றும் Prism Crush White வண்ணங்களில் வாங்கலாம்.
விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, Samsung Galaxy A30s, Android Pie-யில் இயங்குகிறது. இது dual-SIM (நானோ)-வை ஆதரிக்கிறது. இது 6.4-inch HD+ (720x1560 pixels) Infinity-V Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 4GB RAM மற்றும் 64GB உடன் இணைக்கப்பட்டு octa-core Exynos 7904 SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த போன் மூன்று கேமராக்களை பின்புறத்தில் கொண்டுள்ளது. அவற்றில் f/1.7 aperture உடந் 25-megapixel primary shooter, 8-megapixel ultra-wide-angle கேமரா மற்றும் 5-megapixel depth சென்சார் ஆகியவை அடங்கும். முன்புறத்தில், Samsung Galaxy A30s-யில் 16-megapixel f/2.0 செல்ஃபி கேமரா உள்ளது. இந்த Samsung Galaxy A30s போனில் in-display fingerprint சென்சார் உள்ளது. மேலும், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியை பேக் செய்கிறது மற்றும் NFC-ஐ ஆதரிக்கிறது.
Samsung Galaxy A30s With Triple Rear Cameras, 4,000mAh Battery Launched in India
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features