2019 ஆம் ஆண்டில் 100-க்கும் மேற்பட்ட போன்களை நாங்கள் மதிப்பாய்வு செய்துள்ளோம், இவற்றில் சிறந்தவை இங்கே.
ஸ்மார்ட்போன் மதிப்புரைகளில் தனித்துவம் பெற்ற ஒரு வலைத்தளத்திற்கு கூட, 2019-ன் சிறந்த போனைத் தேர்ந்தெடுப்பது கடினம். இந்த ஆண்டு 100-க்கும் மேற்பட்ட போன்களை நாங்கள் மதிப்பாய்வு செய்துள்ளோம். இப்போது 2019 முடியவிருகிறது. இந்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த போன்களைப் பார்க்க இது ஒரு நல்ல தருணம். விமர்சனங்கள் ஆசிரியர் ஜாம்ஷெட் அவாரி (Jamshed Avari) இந்த ஆண்டின் சிறந்த போன்களைப் பற்றி பேச தொகுப்பாளர் பிரணாய் பராப் (Pranay Parab) உடன் இணைகிறார். OnePlus 7T மற்றும் OnePlus 7T Pro பற்றி பேசுவதன் மூலம் இந்த அத்தியாயத்தைத் தொடங்குகிறோம். இந்த இரண்டு போன்களும் எங்கள் மதிப்புரைகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டாலும், நிறுவனம் செய்த சில தவறான தகவல்களை நாங்கள் எடுத்துக்காட்டுகிறோம். அது ஏன் சிலரை ஏமாற்றமடையச் செய்தது. Samsung Galaxy Note 10+ மற்றும் நிறுவனத்தின் சில ஸ்மார்ட்போன்கள் பற்றி பேசுகிறோம். இந்த ஆண்டு சாம்சங் சிறப்பாகச் செய்ததையும், அதை மேம்படுத்தக்கூடிய பகுதிகளையும் நாங்கள் விவரிக்கிறோம். இந்த பட்டியலில் இருந்திருக்கக்கூடிய ஒரு சாம்சங் போனைப் பற்றியும் பேச நாங்கள் தவறவிட்டோம்.
பின்னர், iPhone 11 மற்றும் iPhone 11 Pro Max பற்றி பேசுகிறோம். இந்த ஆண்டு ஆப்பிள் தனது போன்களை எவ்வளவு மேம்படுத்தியுள்ளது என்பதையும், 2020-ல் வரும் ஐபோன்களிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதையும் இங்கே எடுத்துக்காட்டுகிறோம். இறுதியாக, 2019-ன் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களைப் பற்றி பேசுகிறோம், அங்குதான் Redmi, Realme, Vivo, Samsung மற்றும் Oppo பற்றி விவாதிக்கப்படுகிறது. இந்த போன்கள் ஒவ்வொன்றும் சில நல்ல அம்சங்களை மலிவு விலையில் கொண்டு வந்தன. அவற்றில் எது 2019-ல் நிகழ்ச்சியைத் தட்டி சென்றது என்பது பற்றி நாங்கள் பேசுகிறோம். பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவைப் பற்றிய எங்கள் எண்ணங்களுடனும், முன்னோக்கிச் செல்வதை எதிர்பார்ப்பதற்கும் இந்த அத்தியாயத்தையும் முடிக்கிறோம்.
இந்த வார சுற்றின் அத்தியாயங்கள் அவ்வளவுதான். ஆப்பிள் பாட்காஸ்ட்கள் (Apple Podcasts)அல்லது ஆர்எஸ்எஸ் (RSS) வழியாக பதிவு செய்யலாம், அத்தியாயத்தைப் பதிவிறக்கலாம் (download the episode) அல்லது கீழே உள்ள பிளே பொத்தானை அழுத்தலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters