தனது சமூகப் பக்கத்தில், Oppo நிறுவனம் ‘Find U’ எனும் ஒரு “புரட்சிகரமான” ஸ்மார்ட் குடையை அறிமுகப்படுத்துவதாகக் கற்பனையாக அறிவித்து, பயனர்களை வேடிக்கையாக ஏமாற்றியது.
Photo Credit: Oppo
Ava AI Companion-இன் பின்னணியில் உள்ள நிறுவனமான Razer, அந்த AI துணையுக்காக ஒரு AI செல்லப்பிராணியை அறிமுகப்படுத்துவதாக ஒரு கேலியாக அறிவித்தது.
ஏப்ரல் 1, உலகம் முழுவதும் ஏப்ரல் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல வினோதமான மற்றும் வேடிக்கையான அறிவிப்புகளை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தன. ஒப்போ (Oppo) நிறுவனம் 4K டிஸ்ப்ளே கொண்ட 'Find U' என்ற புரட்சிகரமான ஸ்மார்ட் குடையை அறிவித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. மறுபுறம், ரேசர் (Razer) நிறுவனம் தனது AI சாதனத்திற்காக 'Ava Mini' என்ற ஒரு AI செல்லப்பிராணியை அறிவித்து இணையதளவாசிகளிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. 2026 ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நிறுவனங்களால் திட்டமிடப்பட்ட சிறந்த தொழில்நுட்ப குறும்புகளின் பட்டியல் இதோ:
ஒப்போ நிறுவனம் Find U என்ற ஸ்மார்ட் குடையை அறிவித்தது. இது மழையில் உங்களை நனையாமல் பாதுகாப்பதுடன், குடையின் உட்புறப்பகுதியை ஒரு ஸ்மார்ட் டிஸ்ப்ளேவாகவும் பயன்படுத்த அனுமதிக்கும். இதைக் கேட்பதற்கு ஆர்வமாக இருந்தாலும், இது ஒரு ஏர்ரல் ஃபுல்ஸ் குறும்புதானே தவிர உண்மையான சாதனம் அல்ல.
இருப்பினும், ஒப்போ இந்த குறும்பை மிகவும் விவரமாகச் செய்திருந்தது. இந்த கற்பனை சாதனத்தில் வளைந்து கொடுக்கும் 4K OLED டிஸ்ப்ளே, கைப்பிடியில் Find N6 மாடலின் கேமரா அமைப்பு, பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், சோலார் மோட் மற்றும் ஒரு 'அல்ட்ரா ட்ரை மோட்' (Ultra dry mode) இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. இந்த ட்ரை மோட் மூலம் குடை 60,000Hz வேகத்தில் அதிர்ந்து ஒவ்வொரு நீர் துளியையும் உடனடியாக ஆவியாக்கிவிடுமாம். மேலும், இந்த சாதனம் 30 நாட்கள் மட்டுமே கொண்ட ஏப்ரல் மாதத்தின் ஏப்ரல் 31 அன்று அறிமுகமாகும் என்றும் நிறுவனம் கிண்டலாகத் தெரிவித்திருந்தது.
கடந்த ஜனவரி மாதம் CES 2026 நிகழ்வில், ரேசர் நிறுவனம் பயனர்களுடன் உரையாடும் 'புராஜெக்ட் அவா' (Project Ava) என்ற ஹோலோகிராபிக் சாதனத்தை அறிவித்திருந்தது. அந்த சாதனமே ஒரு அறிவியல் புனைவு படம் போல இருந்த நிலையில், ஏப்ரல் முட்டாள்கள் தினத்திற்காக அதன் அடுத்த கட்டத்திற்குச் சென்றது அந்நிறுவனம்.
தனது AI துணைவனுக்குத் துணையாக Ava Mini என்ற உலகின் முதல் 'AI துணைவனுக்கான AI செல்லப்பிராணி'யை ரேசர் அறிவித்தது. "உங்கள் AI நண்பர் தனிமையாக உணரும்போது, அவருக்குத் துணையாக இருக்கவே இந்த அவா மினி" என்று நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. ஒரு நிஜ செல்லப்பிராணியைப் போலவே, இந்த அவா மினிக்கும் அவ்வப்போது உணவு ஊட்ட வேண்டும், அன்பாகத் தடவிக் கொடுக்க வேண்டும் மற்றும் அதைச் சுத்தம் செய்ய வேண்டும் என்பது கூடுதல் வேடிக்கை.
இந்தியத் தனமான ஒரு குறும்பு வேண்டுமென்றால், ஆட்டம் பெர்க் (Atomberg) அதைச் சரியாகச் செய்துள்ளது. அந்நிறுவனம் AutoMatka அல்லது 'தானியங்கி மண் பானை' குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டது. இந்த பானை தண்ணீரைச் சுத்திகரிப்பது மட்டுமல்லாமல், தானாகவே அதன் TDS அளவை நீங்கள் விரும்பும் இடத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுமாம். இமயமலையின் தூய நீரின் சுவை வேண்டுமா? லொகேஷனைச் சேர்த்தால் போதும், பானை அந்தச் சுவையைத் தந்துவிடும்! இது போன்ற ஒரு கண்டுபிடிப்பை உண்மையில் அனைவரும் பார்க்கவே விரும்புவார்கள்.
மடிக்கக்கூடிய (Foldable) போன்கள் பழைய தொழில்நுட்பமாகிவிட்ட உலகில், ஹானர் நிறுவனம் VVVVVV என்ற பலமுறை மடிக்கக்கூடிய போனை அறிவித்தது. சாம்சங் கேலக்ஸி Z ட்ரை-போல்டை விட மேம்பட்ட இந்த போனை விரித்தால் ஒரு ஸ்மார்ட் டிவியாகவே மாறிவிடும். ஐபேட் ப்ரோ-வின் 13-இன்ச் திரை கூடச் சிறியதாகத் தெரிந்தால், இனி உங்கள் பாக்கெட்டிலேயே ஒரு டிவியை எடுத்துச் செல்லலாம்! 16K QNED HDR ரெசல்யூஷனில் நீங்கள் ரீல்ஸ் (Reels) பார்க்கலாம் என நிறுவனம் கிண்டல் செய்தது. ஒப்போவைப் போலவே, ஹானர் நிறுவனமும் இந்த சாதனம் ஏப்ரல் 31 அன்று அறிமுகமாகும் என்று கூறி ரசிகர்களை ஏமாற்றியது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
WhatsApp Reels Shortcut for Chats Rolling Out to Android Beta Testers
Spotify Says Family Plan Verification Will Continue as It Tightens Account-Sharing Rules