Samsung நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வை நடத்தியது. இதில் போல்டபில் போன்கள், ஆடியோ டிவைஸ்களை அறிமுகப்படுத்தியது.
Samsung நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வை நடத்தியது. இதில் போல்டபில் போன்கள், ஆடியோ டிவைஸ்களை அறிமுகப்படுத்தியது. இதில் Galaxy Watch Ultra மற்றும் Galaxy Buds 3 Pro ஆகியவை அடங்கும்.
Galaxy Buds3 மூலம் Galaxy Z Fold6 அல்லது Flip6 செல்போன்களை இணைத்து லைவ் மொழிபெயர்ப்புகளுக்கான அம்சங்களை பெறலாம். இது Galaxy AI மூலம் செயல்படுத்தப்படுகிறது. Galaxy Buds3 பயன்படுத்தி பயனர்கள் குரல் கட்டளை மூலம் செயல்பாடுகளை கட்டுப்படுத்தலாம். இயர்பட்கள் அல்லது ஸ்மார்ட்ஃபோனைத் தொடாமல் இசையை இயக்குவதை எளிதாக்கலாம். அடாப்டிவ் இக்யூ மற்றும் அடாப்டிவ் ஏஎன்சி ஆகியவை மைக்ரோஃபோனில் பேசும் போது தெளிவான ஒலி அனுபவத்தை கொடுக்கிறது. அடாப்டிவ் இரைச்சல் கட்டுப்பாடு, குரல் கண்டறிதல் போன்ற வசதிகள் இருக்கிறது.
பயனர் வசதி மற்றும் பாணியை மனதில் கொண்டு Galaxy Buds3 வடிவமைக்கப்பட்டுள்ளது. Buds3 Pro இசையை அனுபவிக்க சிறப்பானது. Buds3 இதர பயன்பாடுகளுக்கும் உதவும்.
Galaxy Buds3 Pro 2 Way ஸ்பீக்கர்களுடன் மேம்பட்ட ஆடியோ தரத்தை கொடுக்கிறது. தெளிவான ஒலிக்காக இரட்டை ஆம்பிளிபயர், ஆடியோ பிளேபேக்கிற்காக SSC கோடெக்குடன் கூடிய அல்ட்ரா ஹை-குவாலிட்டி ஆடியோ வசதி உள்ளது. இரைச்சல் சூழல்களிலும் உயர்தர குரல் அழைப்புகளை உறுதி செய்கிறது.
பேட்டரி ஆயுளைப் பொறுத்தவரை Buds3 ஆனது மொத்தம் 24 மணிநேர பயன்பாடு மற்றும் 18 மணிநேரம் பேசும் வசதியை தருகிறது. மறுபுறம்Buds3 Pro மொத்தம் 26 மணிநேர மியூசிக் பிளேபேக் மற்றும் 20 மணிநேரம் பேசும் வசதியை தருகிறது. Buds3 மற்றும் Buds3 Pro இரண்டும் IP57 நீர் எதிர்ப்பைக் கொண்டுள்ளத. மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை அதன் பாகங்களில் இணைத்து, பேக்கேஜிங்கிற்கு 100% மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தை சாம்சங் பயன்படுத்துகிறது.
Galaxy Buds3 தொடர் சில்வர் மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது.
Buds3: ரூ14,999
Buds3 Pro: ரூ19,999
Buds3 முன்பதிவு செய்பவர்களுக்கு 5000 ரூபாய் வரை கேஷ்பேக் கிடைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale