Photo Credit: Unsplash
இன்ஸ்டாகிராமில் Create an AI chat என இருக்கும். அதனை கிளிக் செய்தால் Meta AI என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் போதும் மெட்டா ஏஐ ரெடியாகிவிடும். பாலிசியை படித்து ஓகே அனுப்பினால். மிக எளிதாக மெட்டா ஏஐ மாடலை உங்களால் பயன்படுத்த முடியும். பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பரவும் தவறான தகவல்களை கண்டுபிடிக்க மெட்டா நிறுவனம் AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த AI நுட்பமே தவறு செய்தால் என்ன செல்வதென்று தெரியவில்லை.
இது உண்மையான புகைப்படங்களை AI உருவாக்கிய படம் என குறிப்பிட்டு காட்டுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வாங்கிய போட்டோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அதனை AI உருவாக்கிய போட்டோ காட்டுகிறது இன்ஸ்டாகிராம். இது போல பல பிழைகளை Meta AI செய்வதாக கூறப்படுகிறது.
https://i.gadgets360cdn.com/large/kkr_instagram_ai_label_1719313169785.jpg
இது குறித்து மெட்டாவின் குளோபல் விவகாரங்களின் தலைவர் நிக் கிளெக் விளக்கம் அளித்துள்ளார். AI அம்சத்தை செயல்படுத்துவதில் குறைபாடு இருப்பதாகத் தெரிகிறது. எங்கள் AI கருவி Google , OpenAI , Microsoft , Adobe , Midjourney மற்றும் Shutterstock ஆகியவற்றிலிருந்து படங்களை சரியாக லேபிளிடும் என கூறினார். மேலும் எங்கள் செயல்முறையை மேம்படுத்த நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம் என்றார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்