ஜூன் மாத தொடக்க நாளிலேயே தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 சரிந்து அதிரடி சலுகையை தந்துள்ளது
Photo Credit: AI Generated
கடந்த மே மாதம் முழுவதும் ஏறி இறங்கி போக்கு காட்டி வந்த தங்கம் விலை, புதிய மாதமான இன்று ஜூன் 1-ஆம் தேதி அதிரடி வீழ்ச்சியைக் கண்டுள்ளது. நகைப்பிரியர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியைத் தரும் வகையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,040 வரை குறைந்துள்ளது. கடந்த மே 13 அன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,000-க்கும் மேல் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய தங்கம், தற்போது படிப்படியாகக் குறைந்து வருவது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,500 ஆகவும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வாங்கும் 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமிற்கு ரூ.95 குறைந்து ஒரு கிராம் ரூ.12,180 ஆகவும், சவரனுக்கு ரூ.760 குறைந்து ஒரு சவரன் ரூ.97,440 ஆகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
மறுபுறம், தங்கம் விலை கணிசமாகக் குறைந்திருந்தாலும் வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. சென்னையில் இன்று வெள்ளி விலையானது நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன் அடிப்படையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.290 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,90,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை சரிவுடன் தொடங்கியிருப்பது நகை வாங்குவோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999