இந்தியாவில் தற்போது அசத்தலான டீடெல் டி1 எல்சிடி டிவி!!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 28 நவம்பர் 2018 21:34 IST
ஹைலைட்ஸ்
  • டீடெல் டி1 டிவியானது 19-இன்ச்+ கிரேடு பேனலைக் கொண்டுள்ளது.
  • இந்த புதிய டிவியானது HDMI போர்ட் மற்றும் யுஎஸ்பி போர்ட்டினைக் கொண்டுள்ளது
  • டீடெல் டி1 டிவி 12W ஸ்பீக்கரினைக் கொண்டுள்ளது.

டீடெல் டி1 டிவியானது 300000:1 என்ற வீதத்தில் உள்ளது. முன்பக்கத்தில் இரு ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.

டீடெல் டி1 டிவியானது டெல்லியில் செவ்வாயன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூ.3,999 ஆகும். இது உலகின் மிக விலை மலிவான எல்சிடி டிவியாகும். இதில் 19-இன்ச் ஏ+கிரேடு பேனல் HDMI போர்ட் மற்றும் யுஎஸ்பி போர்ட்டினைக் கொண்டுள்ளது.

மற்ற டிவிக்களைப் போல டீடெல் டி1 டிவியினை கம்பியூட்டர் மானிட்டர் மற்றும் லேப்டாப்- ஆக பயன்படுத்திக் கொள்ளலாம். டீடெல் நிறுவனம் போன் தயாரிப்பில் பெயர்போனது.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கியது. இதுவரை 7 எல்இடி டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. அவை 24இன்ச் - 65இன்ச் திரையினைக் கொண்ட டிவிகள் ஆகும்.

இந்தியாவில் டீடெல் டி1 டிவியின் விலை

இதன் விலை ரூ. 3,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் MRP ரூ. 4,999 ஆகும். இந்த புதிய டிவியினை டீடெல் இணையதளம் மற்றும் டீடெல் மொபைல் அப்பின் மூலம் வாங்கலாம். விநியோகஸ்தர்கள் மூலம் டீடெல் டி1 டிவியினை B2BAdda.com மூலமும் வாங்கலாம்,

டீடெல் டி1 டிவியின் முக்கியம்சம்ங்கள்

டீடெல் டி1 டிவியானது 19 இன்ச் டிஸ்பிளே பேனலை பெற்றுள்ளது. 1366*768 பிக்சல் மற்றும் 30000:1 காண்ட்ராஸ்டினைக் கொண்டுள்ளது.

இதன் பேனல் ஏ+ கிரேடு ஆகும். இதன் முன்பக்கத்தில் இரு ஸ்பீக்கர்கள் உள்ளன. 12W ஸ்பீக்கர் என்பதால் டிவியிலிருந்து வரும் சத்தத்தை தெளிவாக கேட்க முடியும்.

Advertisement

டீடெல் டி1 டிவியில் HDMI போர்ட் மற்றும் யுஎஸ்பி போர்ட் உள்ளது. இதனை கம்பியூட்டருடனும் செயல்படும். மேலும் யுஎஸ்பி மல்டி மீடியா யுஎஸ்பி டிரைவ் மூலம் திரையிடும் ஆடியோ மற்றும் வீடியோவினை டீடெல் டிவி சப்போர்ட் செய்யும்.

இதுகுறித்து பேசிய டீடெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், டீடெல் டி1 டிவியானது வாடிக்கையாளர்களின் தேவையை குறைவான விலையில் முழுமையாக நிறைவு செய்யும் என்று கூறினார்.

மேலும், குக்கிராமங்களையும் டீடெல் டி1 டிவி போய் சேரும் என்று நம்புவதாக அவர் கூறினார்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Detel D1 TV, Detel D1 TV price in India, Detel
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy ஸ்மார்ட்போன் விலைகள் இந்தியாவில் உயர்வு – பல மாடல்கள் பாதிப்பு
  2. Motorola Edge 70 Fusion இந்தியாவில் அறிமுகம்.. அரசவைக்கு சிறப்பு அம்சங்கள்
  3. MacBook Neo அதிகாரப்பூர்வமாக அறிமுகம்: பட்ஜெட் விலை, நான்கு நிறங்கள் மற்றும் பல அம்சங்கள
  4. Google Pixel 10 சலுகை: ₹13,800-க்கும் அதிக தள்ளுபடி – எப்படி பெறுவது?
  5. Xiaomi 17T இந்தியாவில் வெளியாகும் நாள் இதுவா? Xiaomi 17 Ultra இந்தியாவில் அறிமுகமாக தயாராகிறது
  6. விவோ X300 FE Snapdragon 8 Gen 5, 50MP Telephoto Camera உடன் அறிமுகம்
  7. மார்ச் 5ல் அறிமுகமாகும் முன் Nothing Phone 4a சீரிஸ் விலை வெளியானது
  8. டெக்னோ பாப் எக்ஸ் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி; 'டெக்னோ ஸ்பார்க் கோ 3'-ன் மறு பதிப்பா இது?
  9. 13-இஞ்ச் Liquid Retina திரை, Apple A18 Pro சிப் MacBook Neo இந்தியாவில்
  10. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.