சையோமி ரெட்மி Y2 போன் இந்தியாவில் வெளியானது!

விளம்பரம்
Written by Ankit Chawla மேம்படுத்தப்பட்டது: 7 ஜூன் 2018 18:00 IST
ஹைலைட்ஸ்
  • டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் Y2 வெளியிடப்பட்டது
  • இதன் பேசிக் மாடலின் விலை ரூ.9,999
  • அமேசான் இந்தியா தளத்தில் இந்த போன் கிடைக்கும்

 

இதுவரை சையோமி போன்கள் அனைத்துமே, இணையத்திலும் இளைஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், Y2 போனும் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டில் சையோமியின் ரெட்மி Y1 வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் Y2 போன் வெளியிடப்பட்டது. இதன் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராதான். 

ரெட்மி எஸ்2 போனின் பெரும்பான்மையான வசதிகளை இந்த போன் பெற்றுள்ளது. Y2, டார்க் க்ரே, ரோஸ் கோல்டு, மற்றும் கோல்டு வண்ணங்களில் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். ரெட்மியின் Y தொடர் ஸ்மார்ட் போன்களில் இந்த போனுக்கு தனி இடம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் கூட, இந்த போன் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி Y2 இரண்டு வகைகளில் விற்பனைக்கு வருகிறது. 4 ஜிபி ரேம், 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட டாப் வேரியன்ட் 12,999 ரூபாய்க்கு விற்கப்படும். 3 ஜிபி ரேம், 32 ஜிபி சேதிப்பு வசதி கொண்ட அடுத்த வேரியன்ட் 9,999 ரூபாய்க்கு உங்கள் வசமாகும்.

அமெசான் இந்தியா, சையோமியின் அதிகாரபூர்வ இணையதளங்களில் Y2-வை வாங்க முடியும். ஜூன் 12-ம் தேதி முதல் மற்ற போன்களோடு போட்டிபோடப் போகிறது Y2. இன்னும் ரீடெய்ல் ஸ்டோர்களுக்கு எப்போது வரும் என்று தெரிவிக்கப்படவில்லை. எப்படியும் இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் இருக்கும் ரீடெய்ல் கடைகளையும் Y2 அலங்கரிக்கும். 

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good daylight camera performance
  • Dedicated microSD card slot
  • Good battery life
  • Bad
  • Slow facial recognition
  • Average lowlight camera performance
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 625
Front Camera 16-megapixel
Rear Camera 12-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3080mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1440 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Amazon, Amazon India
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. லாவா போல்ட் என்2 5ஜி 6,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  2. புதிய அம்சத்தால் இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களது புரொஃபைல் கிரிட்டை இனி விருப்பம்போல மறுவரிசைப்படுத்தலாம்
  3. ஐஓஎஸ் தளத்தில் வாட்ஸ்அப் பல-கணக்கு ஆதரவு (Multi-Account Support) கூடுதல் பயனர்களுக்கு வழங்கப்படுவதாகத் தகவல்
  4. WWDC 2026: iOS 27 வெளியீட்டுத் தேதி, அப்டேட் செய்யும் முறை மற்றும் ஆதரவுள்ள சாதனங்களின் பட்டியல்
  5. WWDC 2026: முக்கிய ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் மேம்பாடுகளுடன் கூடிய சிரி AI-ஐ ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது
  6. WWDC 2026: ஜெமினி AI மூலம் இயங்கும் புதிய சிரி அம்சங்களை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்
  7. அமேசான் மெகா டீல்ஸ்: விவோ X300 FE, ஒன்பிளஸ் நோர்ட் CE 6 மற்றும் முக்கிய கேஜெட்டுகளுக்கு அதிரடி தள்ளுபடி!
  8. ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல்: ஒன்பிளஸ் 15, நோர்ட் 6, பேட் 4 மற்றும் பல தயாரிப்புகளுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு
  9. இந்தியாவில் சியோமி பேட் 8 இன் விலை உயர்ந்தது: இப்போது அதன் விலை எவ்வளவு என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்
  10. இந்தியாவில் வாங்குபவர்களின் முடிவுகளில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் முக்கிய பங்கு வகிப்பதாக மெட்டா ஆய்வு கூறுகிறது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.