ரெட்மி 9, ரெட்மி 9A, ரெட்மி 9 பிரைம் ஆகியவை போன்றே ரெட்மி 9i ஸ்மார்ட்போனும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Credit: Twitter/ Xiaomi India
ரெட்மி 9i ஸ்மார்ட்போன்
ஷாவ்மி நிறுவனம் ரெட்மி 9i ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
ஷாவ்மி நிறுவனம் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் தொடங்கி ரெட்மி 9A வரையில் அறிமுகம் செய்து விட்டது. இருப்பினும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியால், மற்றுமொரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இது ரெட்மி 9i ஆகும்.
ரெட்மி 9i ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது அது உறுதிசெய்யப்பட்டுள்ளது. mi.com மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்களில் ரெட்மி 9i ஸ்மார்ட்போன் குறித்த விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இதில் 4ஜிபி ரேம், வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் இருப்பதாக தெரிகிறது. மேலும், MiUI 12 அப்டேட்டில் சாப்ட்வேரில் இயங்குவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அடர் நீல நிறத்திலான வேரியண்ட் மட்டுமே விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே, வேறு நிறங்களில் வெளிவருமா என்பது செப்டம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும்.
ரெட்மி 9, ரெட்மி 9A, ரெட்மி 9 பிரைம் ஆகியவை போன்றே ரெட்மி 9i ஸ்மார்ட்போனும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதிலுள்ள சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் லீக் ஆகவில்லை. இருப்பினும், அறிமுகத்திற்கு முன்பாகவே இதுதொடர்பான விவரங்கள் வெளியாகிவிடும் என்று கூறப்படுகிறது.
Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Honor Win Series Camera Specifications Tipped Days Ahead of China Launch
Oppo Reno 15 Series India Launch Date, Price Range Surface Online; Tipster Leaks Global Variant Price, Features
Clair Obscur: Expedition 33's Game of the Year Win at Indie Game Awards Retracted Over Gen AI Use