ஜியோமி எம்.ஐ மிக்ஸ் 3 அறிமுகப்படுத்தும் விழா சீனாவில் அக். 25ல் நடைபெறும் என்று அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிகழ்ச்சி சீனா தலைநகர் பீஜிங்கில் மதியம் 2 மணிக்கு நடைபெற்றது
Photo Credit: Weibo/Lin Bin
ஜியோமி எம்.ஐ மிக்ஸ் 3ன் விலை பீஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அறிவிக்கப்பட்டது.
ஜியோமி எம்.ஐ மிக்ஸ் 3 அறிமுகப்படுத்தும் விழா சீனாவில் அக். 25ல் நடைபெறும் என்று அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிகழ்ச்சி சீனா தலைநகர் பீஜிங்கில் மதியம் 2 மணிக்கு நடைபெற்றது.
ஜியோமி சீனா வலைதளத்தில் இந்நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் ஜியோமியின் எம்.ஐ மிக்ஸ் 3 போஸ்டர்கள் விளக்கும் போனின் பச்சை மற்றும் நீல வண்ணம் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. இதன் பின்புறம் செங்குத்தாக இரட்டை கேமிராக்கள் அமைந்துள்ளன. பின்புறத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் வசதி உள்ளது. வெளியிடப்பட்ட படங்களில் ஆண்ட்ராய்டு 9.0 பையில் இயங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது யு.எஸ்.பி டைப்-சி போர்ட் போனின் அடிப்பாகத்தில் உள்ளது.
ஜியோமி எம்ஐ மிக்ஸ் 3 விலை குறித்த தகவல்கள் வதந்திகளாக பரவிவருகின்றன அதன்படி, 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி வேரியண்டின் விலை $510 டாலராக, (தோராயமாக ரூ.37,500) இருக்கலாம். 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை $555 டாலராக, (ரூ.40,900) இருக்கலாம். 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை $600 டாலராக, (ரூ.44,200) இருக்கலாம். 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி வேரியண்டின் விலை $645 டாலராக, (ரூ.47,500) இருக்கலாம். மேலும், டாப் ஏண்ட் மாடலான 10ஜிபி ரேம், வேரியண்டின் விலை குறித்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை.
வதந்திகளின் படி, எம்.ஐ மிக்ஸ் 3 ஆண்ட்ராய்டு 9.0 பையில் இயங்கும் என்று நம்பலாம். அதில், 1080x2340 ஸ்கிரின் அளவு, 19.5:9 அக்ஸப்ட் ரேஷியோ மற்றும் 10ஜிபி ரேமுடன் 256ஜிபி ஸ்டோரேஜினைக் கொண்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல்களை ஜியோமி நிறுவன தயாரிப்பு சந்தைப்படுத்துதல் குறித்து அவர்களது இணைய பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஜியோமி எம்.ஐ மிக்ஸில் முன்புறம் இரு கேமிராவும், பின்புறம் இரு கேமிராவும் உள்ளது. 24 மெகா பிக்சல் செல்பி கேமிரா இருக்கும் என்று ஜியோமி நிறுவனத்தினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்.ஐ மிக்ஸ் 3ல் 960fps ஸ்லோ-மோ வீடியோ வசதி உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Secret Rain Pattern May Have Driven Long Spells of Dry and Wetter Periods Across Horn of Africa: Study
JWST Detects Thick Atmosphere on Ultra-Hot Rocky Exoplanet TOI-561 b
Scientists Observe Solar Neutrinos Altering Matter for the First Time