Xiaomi Mi A2 , Mi 6X அண்ட்ராய்டு போலவேயிருக்கும் என எதிர்ப் பார்க்கப்படுவதாக தகவல்கள் கடந்த சில மாதங்கள் வந்துகொண்டுயிருக்கும் நிலையில் கூடிய விரைவில் வெளியிடப்படும். அதன் லேட்டஸ்ட் தகவலின் படி வெளிவரவிருக்கும் தொலைபேசி ஸ்விஸ் எலெக்ட்ரானிக் ரிடைல் போர்டலில் இதனுடைய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி முன்னால் வெளியிடப்பட்ட xiaomi Mi 6X போல இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் வலைத்தளத்தில், 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதின் விலை CHF 289 (தோராயமாக ரூ. 19,800), 64 ஜிபி மாடலின் விலை CHF 329 (ரூ. 22,500), மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டதின் விலை CHF 369 (ரூ. 25,200)
Xiaomi Mi A2 வில் எதிர்ப்பார்க்கப்படும் ஸ்பெகிஃபிகஷ்சன்ஸ்
ஜெர்மன் போர்டல் டிஜிடெக் பட்டியலின்படி xiaomi Mi A2, Mi 6Xல் காணப்படுகின்ற அதே 5.99 இன்ச்சுடன் முழு HD+ (1080x 2160 pixels) கொண்டதாகயிருக்கும். இது ஒரு குவால்காம் ஸ்னாப்ட்ராகன் (Qualcomm snapdragon)660 SoC மூலம் இயக்கப்படுகிறது, 4 GB RAM மற்றும் 32GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கும்.
கேமராவை பொருத்தவரை xiaomi Mi A2 12 பிக்ஸ்சலை கொண்ட செங்குத்தான இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 20 மெகா பிக்ஸ்சல் ஃப்ரென்ட் கேமராவை கொண்டு செல்ஃபி மற்றும் விடியோ கால்களுக்கு உதவிகாகயிருக்கும். ஹூடுக்கு கீழ் 3010 mAh பேட்டரியுடன் குவிக் சர்ஜ் 3.0 கொண்டுள்ளது. பட்டியலில் உள்ள இணைப்பு விவரங்கள், 4G LTE, WiFi 802.11 ac, Bluetooth v 5.0 மற்றும் USB Type –C.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்