இந்தாண்டின் அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் Mi 10 Pro Plus ?

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 30 ஜூலை 2020 11:20 IST
ஹைலைட்ஸ்
  • Mi 10 Pro Plus ஆகஸ்டில் அறிமுகமாகலாம்
  • இந்த ஆண்டின் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜ் ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது
  • இன்னும் பல சிறப்பம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம்

Photo Credit: Weibo/ Digital Chat Station

இந்தாண்டின் ஃபாஸ்டெஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போனாக Mi 10 Pro Plus அறிமுகமாகலாம் என்று செய்திகள் வந்துள்ளன

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷாவ்மி நிறுவனம் அன் டு டு பெஞ்ச்மார்கஸ் தளத்தில் அபரிமிதமான மதிப்பெண்களைப் பெற்றது. அதாவது M20007J1SC என்ற மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் 687,422 பெஞ்ச்மார்க்கிங் ஸ்கோர்களைப் பெற்றது. இதனிடையே இந்த வார தொடக்கத்தில், ஷாவ்மி நிறுவனத்தின் சிஇஓ லீ ஜன், ஷாவ்மியின் அடுத்த ஸ்மார்ட்போனைப் பற்றி டீஸ் செய்தார். 

இவையணைத்தையும் வைத்துப் பார்க்கும் போது, ஷாவ்மி நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போனாக Mi 10 Pro Plus ஸ்மார்ட்போனை களமிறக்க உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் இணையதளம் குறிப்பிடுகையில், இந்த ஆண்டின் அதிவேகமாக சார்ஜ் ஏறும் ஸ்மார்ட்போனாக எம்ஐ 10 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

மேலும், எம்ஐ 10 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனில் வயர் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களும் இருக்கலாம். அன்டுடு பெஞ்ச்மார்க் ஸ்கோரில் ஷாவ்மியின் புதிய ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் மதிப்பெண்கள் முழுவதுமாக வெளிவந்துள்ளது. 

அதன்படி,  சிபியு.,வில் 182,883 புள்ளிகளும், ஜிபியு.,வில் 292,704 புள்ளிகளும், மெமரியில் 115,687 புள்ளிகளும், UX சோதனையில் 96,148 புள்ளிகளும் பெற்றுள்ளது. ஒட்டு மொத்தமாக 687,422 புள்ளிகள் ஷாவ்மியின் புதிய ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. 

எம்ஐ 10 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனில் 4,500 mAh பேட்டரி, 30x ஜூம் கேமரா, இன்டிஸ்பிளே விரல் ரேகை சென்சார், ஸ்டீயோ ஸ்பீக்கர், இன்பில்டு கூலிங் டெக்னாலஜி உள்ளிட்ட அம்சங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.


Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Sony LYT-901 வந்துருச்சு! 200 மெகாபிக்ஸல்... இனி போட்டோஸ் வேற லெவல்
  2. OnePlus-ன் Performance King! Ace 6T லான்ச் தேதி கன்ஃபார்ம்! 8000mAh பேட்டரி, 165Hz டிஸ்ப்ளேன்னு செம பவர்
  3. 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே! Realme P4x வருது டிசம்பர் 4-ஆம் தேதி! காத்திருங்கள்
  4. WhatsApp-ல் உங்களுக்குப் பிடிச்ச AI Bot-க்கு டாட்டா! Meta AI மட்டும்தான் இனி உள்ளே வர முடியும்
  5. Xiaomi 17 Ultra டெலிஃபோட்டோ லென்ஸ் மட்டும் 200MP! DSLR-ஐ ஓரங்கட்டப் போற Xiaomi-யின் அடுத்த பிளான்
  6. POCO C85 5G: Dimensity 6100+, ஃப்ரண்ட் டிசைன் லீக் - இந்தியா வருகை உறுதி!
  7. சார்ஜ் பத்தி கவலையே வேணாம்! OnePlus Ace 6 Turbo-வில் 9,000mAh பேட்டரி! Snapdragon 8s Gen 4 பவர் வேற!
  8. Nord 4 யூசர்ஸ் கொண்டாடுங்க! OxygenOS 16 அப்டேட் வழியா AI மோட், புது Widget-கள், செம கஸ்டமைசேஷன் ஆப்ஷன்ஸ் கிடைச்சுருக்கு
  9. Google Circle to Search-ல இப்படி ஒரு பவர் கிடைச்சுருக்கு! AI மோட் மூலமா இனி நீங்க கேட்குற எல்லா கேள்விக்கும் டக்குனு பதில்!
  10. வருத்தம் தரும் செய்தி! நம்ம டெய்லி Chat-க்கு ஹெல்ப் பண்ண Microsoft Copilot AI, வாட்ஸ்அப்-ல இருந்து விலகுறாங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.