சியோமி நிறுவனம், மீண்டும் எம்.ஐ என்ற பெயரில் தனது ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதற்கான பணி செய்து வருவதாக தெரிகிறது.
எம்.ஐ மிக்ஸ் தொடரில் அடுத்த ஸ்மார்ட்போன், ஹெர்குலஸ் என பெயரிடுகிறது சியோமி
சியோமி நிறுவனம், தான் தயாரிக்கும் ஸ்மார்ட்போன்களை ரெட்மி என்ற பெயரிலும் எம்.ஐ என்ற பெயரிலும் தனது வெளியிட்டு வந்தது. முன்னதாக எம்.ஐ என்ற பெயரில் தனது ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வந்த சியோமி நிறுவனம், தற்போது வெளியாகும் அனைத்து ஸ்மார்ட்போன்களையும் ரெட்மி என்ற பெயரிலேயே வெளியிட்டு வருகிறது. தற்போது கிடைத்த தகவலின்படி சியோமி நிறுவனம், மீண்டும் எம்.ஐ என்ற பெயரில் தனது ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதற்கான பணி செய்து வருவதாக தெரிகிறது. அதன்படி எம்.ஐ மிக்ஸ் போனின் அடுத்த வரிசை போன்களை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெருவதாக தகவல். இதற்கிடையில், சியோமி நிறுவனம், புதிதாக ஸ்னேப்ட்ராகன் 855-யால் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பைக்கொண்டு வெளியாக உள்ள ஸ்மார்ட்போனை "ஹெர்குலஸ்" என்ற பெயரில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
XDA என்ற ஒரு மொபைல் மென்பொருள் மேம்பாட்டு சமூகத்தைச் சார்ந்த மிஷால் ரஹ்மான் (Mishaal Rahman) என்ற ஒரு மேம்பாட்டாளர், "சியோமி நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன், ஸ்னேப்ட்ராகன் 855 ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பைக் கொண்டு "ஹெர்குலஸ்" என்ற பெயரில் வெளியாகும்" என்ற ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். சுதன்சு அம்போர் (Sudhanshu Ambhore) என்ற டெக்னாலஜி தகவல்களை பகிர்பவர், "சியோமியின் அடுத்த ஸ்மார்ட்போன்களான எம்.ஐ மிக்ஸ் 3S மற்றும் எம்.ஐ மிக்ஸ் 4, "ஹெர்குலஸ்" என்ற பெயரில் அறிமுகமாகும்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் இந்த "ஹெர்குலஸ்"-ன் அம்சங்களை பற்றிப் பேசுகையில் இது வயர்லெஸ் சார்ஜ் மற்றும் திரையிலேயே கைரேகை சென்சார் கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மொபைல்போனின் கேமரா பற்றிய தகவல்களும் கசிந்துள்ளது. அந்த தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமராக்களுடனும், ஒரு முன்புற கேமராவுடனும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் உறுதியானது என்றால் கேமரா வசதியில் இந்த ஸ்மார்ட்போன், எம்.ஐ மிக்ஸ் 3 விட சற்றே பின்தங்கியிருக்கும். எம்.ஐ மிக்ஸ் 3-யில் இரண்டு முன்புற கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், சியோமி இந்த ஸ்மார்ட்போன் GPU ஓவர்க்லாக்கிங் வசதியுடன் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது உன்மையாக இருக்கும் பட்சத்தில், இந்த மொபைல்போனின் செயல்பாட்டு வேகம் சிறப்பாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன், NFC இணைப்பு கொண்டு வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
NFC இணைப்பு என்றால் என்ன?
NFC இணைப்பு என்பது என்னவென்றால் இரண்டு ஸ்மார்ட்போன்களை 4cm அல்லது அதற்கு அருகாமையில் கொண்டு செல்கையில் தானாகவே இணைத்துக்கொள்ளும் தொழில்நுட்ப வசதி ஆகும். இந்த தொழில்நுட்பம், தற்போது உள்ள ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி நோட் 9, கூகுள் பிக்சல் 3, ஒன்ப்ளஸ் 6T, மோடோ Z3 ப்ளே, நோக்கியா 7.1, நோக்கியா 8X போன்ற ஸ்மார்ட்போன்களில் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதுவரை எந்த ஒரு உறுதியான தகவலையும் சியோமி நிறுவனம் வெளியிடவில்லை. சியோமியின் அடுத்த ஸ்மார்ட்போன்களான, எம்.ஐ மிக்ஸ் 3S மற்றும் எம்.ஐ மிக்ஸ் 4 ஆகிய ஸ்மார்ட்போன்களும், "ஹெர்குலஸ்" என்ற பெயரில் தான் வெளியாக உள்ளது என்ற மாதிரியான தகவல்களையும் சியோமி நிறுவனம் வெளியிடவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters