விவோ Z-தொடரில் அடுத்த ஸ்மார்ட்போனிற்கான இந்திய அறிமுக தேதி வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த செயல்பாடு கொண்ட இந்த 'Vivo Z1x' ஸ்மார்ட்போன், இந்தியாவில் செப்டம்பர் 6 அன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாகவே, விவோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் பிரத்யேகமாக பிளிப்கார்ட்டில் தான் அறிமுகமாகவுள்ளது என்பதை அறிவித்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியான வீடியோவில், 'Vivo Z1x' ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார் கொண்டிருப்பதை உறுதிபடுத்தியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், வாட்டர்-ட்ராப் நாட்ச் திரை மற்றும் மூன்று பின்புற கேமராக்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
விவோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஸ்மார்ட்போன் பிரத்யேகமாக பிளிப்கார்ட்டில் மற்றுமே அறிமுகமாகவுள்ளது என்பதை உறுதி செய்துள்ளது. இந்த சீன நிறுவனம் "இந்த ஸ்மார்ட்போன் செயல்திறனை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது, ஹேவி கேம்களை விளையாடும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக Vivo Z1 Pro ஸ்மார்ட்போன் ஸ்னேப்டிராகன் 712 SoC ப்ராசஸர் கொண்டு அறிமுகமானது. அதனால் இந்த 'Vivo Z1x' ஸ்மார்ட்போன், அதைவிட அதிக தரம் கொண்ட சக்தி வாய்ந்த ஸ்னேப்டிராகன் ப்ராசஸரை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோ 'Vivo Z1x' செப்டம்பர் 6-ஆம் தேதி அறிமுகமாகும் என்பதை குறிப்பிடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்பொனிற்கான பர்ஸ்ட் லுக் ஒன்றும் இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோவை வைத்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் நீலம் (blue) மற்றும் ஊதா (purple) என இரண்டு வண்ணங்களை கொண்டுள்ளது. மேலும், முன்புறத்தில் வாட்டர்-ட்ராப் நாட்ச் திரை, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
விவோ நிறுவனத்தால் வெளியிடப்பட்ட டீசர் வீடியோவில், Vivo Z1x ஸ்மார்ட்போனில் இடம் பெற்றுள்ள இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சாரை ப்ளாஷ் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் என குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவை வைத்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. ஸ்மார்ட்பிரிக்ஸ் (SmartPrix) தளத்தில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது.
கூடுதலாக, இந்த Vivo Z1x ஸ்மார்ட்போனிற்கென பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட பக்கத்தில், இந்த ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரியுடன் 22.5W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த ஸ்மார்ட்போன் வாட்டர்-ட்ராப் நாட்ச் திரையுடன் 6.38-இன்ச் அளவிலான திரையை கொண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பக்கம் இந்த Vivo Z1x ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னேப்டிராகன் ப்ராசஸர் பொருத்தப்பட்டிருக்கும் எனக் குறிப்பிடுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிக தர போட்டோக்களை எடுக்க உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள் பற்றி எந்த தகவலும் இடம் பெறவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்