இந்தியாவில் அறிமுகமான இந்த 'விவோ Z1 Pro' ஸ்மார்ட்போனின் அடிப்படை விலை 14,990 ரூபாய்.
ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே கேமராவை கொண்டுள்ளது இந்த 'விவோ Z1 Pro'
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான இந்த சீன நிறுவனத்தின் 'விவோ Z1 Pro' ஸ்மார்ட்போனை முழு நேர விற்பனையில் வைத்துள்ளது விவோ நிறுவனம். இந்த அறிவிப்பு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமான சில வாரங்களிலேயே வந்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஜூலை 3 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தபட்டது. இதன் முதல் விற்பனை ஜூலை 11 அன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. அந்த விற்பனையில் வைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை சில நிமிடங்களிலேயே தீர்ந்து போனதால், அன்று இரவு 8 மணிக்கே மற்றொரு விற்பனையையும் அறிவித்தது விவோ நிறுவனம். அதற்கு அடுத்து ஜூலை 16 அன்று மற்றொரு ஃப்ளாஷ் சேல் நடைபெற்றது.
'விவோ Z1 Pro' ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே கேமரா, ஸ்னேப்ட்ராகன் 712 எஸ் ஓ சி ப்ராசஸர் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேம் மோட் 5.0 மற்றும் மல்டி-டர்போ ஆகிய வசதிகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு பப்ஜி மொபைல் கிளப் ஓபனின் அதிகாரப்பூரவமான ஸ்மார்ட்போன் இதுதான்.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 'விவோ Z1 Pro' ஸ்மார்ட்போனின் அடிப்படை விலை 14,990 ரூபாய். இந்த 14,990 ரூபாய் 'விவோ Z1 Pro' ஸ்மார்ட்போன் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி, 6GB RAM + 64GB சேமிப்பு அளவு மற்றும் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு என மொத்தம் மூன்று வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. 6GB RAM + 64GB சேமிப்பு அளவு வகையின் விலை 16,990 ரூபாய். 6GB RAM + 128GB சேமிப்பு அளவு வகையின் விலை 17,990 ரூபாய். இந்த ஸ்மார்ட்போன்கள் மிரர் ப்ளாக் (Mirror Black), சோனிக் ப்ளாக் (Sonic Black), மற்றும் சோனிக் ப்ளூ (Sonic Blue) என மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்களின் முழு நேர விற்பனை ஃப்ளிப்கார்ட் மற்றும் விவோ தளங்களில் நடைபெறுகிறது.
ஸ்மார்ட்போன் உபயோகிக்கும் இளைஞர்களுக்காக பிரத்யேகமாக இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. 4D வைப்ரேஷன், 3D சவுண்டுடன் கேம் மோட் 5.0 கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. மேலும் மல்டி-டர்போ அம்சம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், சென்டர் டர்போ, AI டர்போ, நெட் டர்போ கூளிங் டர்போ, ART++ டர்போ என ஸ்மார்ட்போன் வேகமாக செயல்பட பல ட்ர்போ அம்சங்களை கொண்டுள்ளது. மேலும், கூகுள் அசிஸ்டன்ட்-கென ஒரு பிரத்யேக பட்டனும் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது.
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. 6.53-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை, 19.5:9 திரை விகிதம், ஹோல்-பன்ச் திரை என்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் ஸ்னேப்ட்ராகன் 712 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் 120 டிகிரி வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா. அதுமட்டுமின்றி 32 மெகாபிக்சல் அளவில் ஹோல்-பன்ச் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
5,000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ள இந்த 'விவோ Z1 Pro', 18W அதிவேக சார்ஜரையும் கொண்டுள்ளது. 201 கிராம் எடை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 162.39x77.33x8.85mm என்ற அளவுகளை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Find N5, Find X8 Series, and Reno 14 Models to Get ColorOS 16 Update in November: Release Schedule