இந்த வருடம், ஆகஸ்ட் மாதத்தில் விவோ y83 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் விலை ரூ.15,990 ஆகும். தற்போது அதன் விலை ரூ.13,990 ஆக குறைந்துள்ளது. விவோ y83 ப்ரோவில் 4ஜிபி ரேம், 64 ஜிபி உள்சேமிப்பு திறன், டிஸ்பிளே நாட்ச் மற்றும் பின்பக்கம் இரு கேமிராவைக் கொண்டுள்ளது.
இதன் விலையில் தற்போது ரூ.2000 வரை குறைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனாது ஜூன் மாதம் வெளியான விவோ y83ன் மேம்படுத்தப்பட்ட வேரியண்ட் ஆகும். அதன் விலை ரூ.13,990 ஆகும். இந்த போனில் 6.22 இன்ச் நாட்ச் டிஸ்பிளே மற்றும் பின்பக்கம் டூயல் கேமரா கொண்டுள்ளது.
விவோ y83 ப்ரோ வேரியண்டின் விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ளதை கேட்ஜெட் 360 உறுதி செய்துள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் விவோ y83 ப்ரோவின் பழைய விலை இதுவரை மாற்றம் செய்யப்படவில்லை. இருப்பினும் விரைவில் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ ஒய்83 ப்ரோவின் முக்கியம்சங்கள்:
இந்த ஸ்மார்போனில் இரட்டை சிம்களை பயன்படுத்திக் கொள்ளலாம். விவோ ஒய்83 ப்ரோ funtouch OS 4.0ல் இயங்குகிறது. இதிலிருக்கும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஆகும். 6.22 இன்ச் ஹெச்டி+ full view 2.0 IPS உடன் திரை வீதம் 19:9 என்றளவில் இருக்கும். இதன் ப்ராசஸர் மீடியாடெக் ஹீலியோ பி22 ஆக்டோ - கோர் ஆகும். விவோ y83 ப்ரோவில் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமிரா உள்ளது. 64ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்டது. 3260 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்