Vivo Y5s, Android 9 Pie அடிப்படையிலான FunTouch OS 9.2-ல் இயங்குகிறது.
Vivo Y5s, octa-core MediaTek Helio P65 SoC-யால் இயக்கப்படுகிறது
Vivo தனது வீட்டு சந்தையில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Vivo Y5s என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo Y19 போன்ற ஸ்மார்ட்போன் ஆகும். Vivo Y5s கடந்த மாதம் சீனாவில் அறிமுகமான Vivo U3 உடன் கிட்டத்தட்ட அனைத்து விவரக்குறிப்புகளையும் பகிர்ந்து கொள்கின்றன. Vivo Y5s-க்கும் Vivo U3-க்கும் உள்ள ஒரே வித்தியாசம் SoC ஆகும். Vivo Y5s, MediaTek's Helio P65 SoC-ஐப் பயன்படுத்துகின்றன. அதே நேரத்தில், Vivo U3 Qualcomm Snapdragon 675 SoC உடன் வருகிறது.
Vivo Y5s-ன் விலை மற்றும் வண்ணங்கள்:
Vivo Y5s-ன் 6GB + 128GB ஸ்டோரேஜின் விலை CNY 1,498 (சுமார் ரூ. 15,000) விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த போன் gradient finish உடன் நீலம், கருப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் வழங்கப்படும். இது வரும் நாட்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் சீனாவிற்கு வெளியே Vivo Y5s அறிமுகம் செய்யப்படுவதில் எந்த தகவலும் இல்லை. இருப்பினும், சில உலகளாவிய சந்தைகளில் Vivo Y19 வெளியீட்டை நாம் காணலாம்.
Vivo Y5s-ன் விவரக்குறிப்புகள்:
டூயல்-சிம் (நானோ) Vivo Y5s, Android 9 Pie அடிப்படையிலான FunTouch OS 9.2-ல் இயங்குகிறது. இந்த போனில், 6.53-inch full-HD+ (1,080x2,340 pixels) டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. 6GB RAM மற்றும் Mali-G52 GPU உடன் இணைக்கப்பட்டு octa-core MediaTek Helio P65 SoC-யால் இயக்கப்படுகிறது. Vivo Y5s, 18W fast சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
இமேஜிங் முன்புறத்தில், Vivo Y5s-ல் f/1.78 aperture உடன் 16-megapixel primary shooter, f/2.2 aperture உடன் 8-megapixel ultra-wide-angle camera மற்றும் f/2.4 aperture உடன் 2-megapixel macro shooter ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் f/2.0 aperture உடன் 16-megapixel selfie shooter உள்ளது.
Vivo Y5s-ன் மற்ற விவரக்குறிப்புகளில், rear fingerprint சென்சார், face unlock ஆதரவு, dual-band Wi-Fi, Bluetooth, Micro-USB 2.0, 4G VoLTE ஆதரவு 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆகியவை அடங்கும். இந்த போன் 162.15x76.47x8.89mm மற்றும் 193 கிராம் எடையைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch