Vivo Y30-யின் விலை மலேசியாவில் 899 மலேசிய ரிங்கிட் (இந்திய மதிப்பில் ரூ.15,800) ஆகும். இந்த போன் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கும்.
விவோ ஒய் 30, ஒரு “அல்ட்ரா ஓ ஸ்கிரீன்” வடிவமைப்பில் எச்டி + டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது
விவோ சீரிஸில் புதிய போனைக் கொண்டுவருகிறது. விவோ ஒய் 30 சமீபத்தில் சந்தைக்கு வந்தது. விற்பனை இன்னும் தொடங்கவில்லை என்றாலும், நிறுவனத்தின் மலேசிய இணையதளத்தில் இந்த போன் காணப்பட்டது. இது புதிய போனின் விலை மற்றும் விவரங்களை கொண்டுள்ளது.
Vivo Y30-யின் விலை மலேசியாவில் 899 மலேசிய ரிங்கிட் (இந்திய மதிப்பில் ரூ.15,800) ஆகும். இந்த போன் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கும். சீன நிறுவனம் இந்த போனை மலேசியாவில் மே 9 முதல் விற்பனை செய்யத் தொடங்கும்.
Vivo ஒய் 30, நிறுவனத்தின் ஃபன் டச் ஓஎஸ் உடன் Android 10-ல் இயக்கும். இந்த போனில் 6.47 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே உள்ளது. இந்த போன் மீடியா டெக் ஹீலியோ பி 35 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது.
போனின் பின்புறத்தில் உள்ள நான்கு கேமராக்களில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் கேமராக்களுடன் வருகிறது. செல்பி எடுக்க 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
விவோ ஒய் 30, 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இணைப்பிற்காக, போனில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளது. போனின் எடை 197 கிராம் ஆகும்.
Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch