Vivo Y28s 5G செல்போன் விலையை குறைந்து போயிருக்காம்

5000mAh பேட்டரியோடு இந்தியாவில் அறிமுகமான Vivo Y28s செல்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது

Vivo Y28s 5G செல்போன் விலையை குறைந்து போயிருக்காம்

Photo Credit: Vivo

Vivo Y28s 5G comes in Vintage Red and Twinkling Purple colour options

ஹைலைட்ஸ்
  • Vivo Y28s 5G செல்போன் IP64 மதிப்பீடு பெற்றுள்ளது
  • 50 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா யூனிட் உள்ளது
  • 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கிறது
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Vivo Y28s செல்போன் பற்றி தான்.


Vivo Y28s சீரிஸ் ஃபோன்கள் MediaTek Dimensity 6100+ 5G SoC சிப் வசதியுடன் வருகிறது. 8ஜிபி வரை ரேம் இருக்கிறது. 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.56-இன்ச் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. Vivo Y28s மற்றும் Y28e இரண்டுமே5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP64 மதிப்பீட்டை பெற்றுள்ளது. இரண்டு போன்களிலும் இரட்டை பின்புற கேமரா யூனிட் உள்ளது. Vivo Y28s செல்போன் 50 மெகாபிக்சல் Sony IMX852 சென்சார் உடன் வருகிறது. Vivo Y28e செல்போன் 13 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது.

முன்பு விலை எவ்வளவு?

Vivo Y28s


4 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு 13,999 ரூபாய்.
6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு 15,499 ரூபாய்
8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு 16,999 ரூபாய்
இது விண்டேஜ் ரெட் மற்றும் ட்விங்கிங் பர்பிள் வண்ணங்களில் வழங்கப்படுகிறது.


இப்போது குறைக்கப்பட்ட விலை


எல்லா மடல்களிலும் 500 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது
4 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு 13,499 ரூபாய்.
6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு 14,999 ரூபாய்
8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு 16,499 ரூபாய்
Vivo Y28s செல்போனில் உள்ள அம்சங்கள்
Vivo Y28s ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14 மூலம் இயங்குகிறது. 90Hz புதுப்பிப்பு வீதம், 840nits உச்ச பிரகாசம் மற்றும் TUV சான்றிதழுடன் 6.56 இன்ச் LCD திரையை கொண்டுள்ளது. HD+ தெளிவுத்திறன் கொண்ட திரையைக் கொண்டுள்ளது.

LPDDR4X ரேம் கொண்ட 6nm octa-core MediaTek Dimensity 6100 5G மூலம் இயக்கப்படுகின்றன. Vivo Y28s செல்போன் 50 மெகாபிக்சல் Sony IMX852 சென்சார் உடன் வருகிறது.


குறைந்த ஒளி மற்றும் பிரகாசமான ஒளி இருந்தாலும் படமெடுப்பதற்கு சூப்பர் நைட் கேமரா பயன்முறை மற்றும் மல்டி ஸ்டைல் போர்ட்ரெய்ட் வசதியை கொண்டுள்ளன. 5G, ப்ளூடூத் 5.4, GPS, Wi-Fi மற்றும் USB Type-C போர்ட் உள்ளது. Vivo Y28s பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. அவை தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP64-மதிப்பீட்டை பெற்றுள்ளது. இது பிளிப்கார்ட், விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் அனைத்து முக்கிய சில்லறை விற்பனைக் கடைகளிலும் கிடைக்கிறது

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் ...மேலும்

#சமீபத்திய செய்திகள்
  1. iQOO Z11 165Hz டிஸ்ப்ளே, 9,020mAh பேட்டரியுடன் டீஸ்; சீனாவில் விரைவில் அறிமுகம்
  2. SanDisk Extreme Fit USB Type‑C Flash Drive இந்தியாவில் அறிமுகமானது.. அசத்தும் அம்சங்கள்
  3. Samsung Galaxy M17e 5G: 50MP கேமரா, 6,000mAh பேட்டரியுடன் மார்ச் 17ல் இந்தியாவில் அறிமுகம்
  4. OnePlus 15T வடிவமைப்பு மற்றும் நிறங்கள் சீனா வெளியீட்டுக்கு முன் அதிகாரப்பூர்வமாக வெளியீடு
  5. Oppo Find N6 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மார்ச் 17 அன்று சீனாவில் அறிமுகம்; கான்பிகரேஷன் மற்றும் நிறங்கள் உறுதி
  6. MacBook Neo vs MacBook Air (2026) ஒப்பீடு: இந்திய விலை, அம்சங்கள் மற்றும் பல
  7. DoT-இன் SIM Binding விதி என்ன? – மெசேஜிங் ஆப்ஸ் மற்றும் பயனர்களுக்கு இதன் தாக்கம்
  8. Poco C85x 5G இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு.. பல சுவாரஷ்ய அம்சங்களுடன்
  9. Samsung Galaxy A37 5G மற்றும் Galaxy A57 5G விவரங்கள் வெளியீட்டுக்கு முன்பே வெளியான தகவல்
  10. Nothing Phone 4a இந்தியாவில் அறிமுகம் – Glyph Bar Interface உடன்; Nothing Phone 4a Proவும் வெளியீடு
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »