Photo Credit: Vivo
Vivo Y19s ஆனது அக்டோபர் மாதம் உலகளவில் வெளியிடப்பட்டது. இருப்பினும், அந்த நேரத்தில் செல்போனின் விலை விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை. இப்போது அதன் விலை, கிடைக்கும் தன்மை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது Vivo நிறுவனம் Y19s மாடல் ஸ்மார்ட்போனின் ரேம் மற்றும் மெமரி கட்டமைப்புகளுடன் விலையை அறிவித்துள்ளது. விவோ பிராண்டின் பிராந்திய வலைத்தளங்களில் ஒன்றில் இந்த செல்போன் பட்டியலிடப்பட்டுள்ளது. இது 6.68-இன்ச் 90Hz HD+ LCD திரை, Unisoc T612 சிப்செட், 50-மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 15W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த பட்ஜெட் ரக செல்போனின் இந்திய வெளியீடு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தில் Vivo Y19s விலை 4GB ரேம் + 64GB மெமரி மாடல் ரூ. 9,800 என்கிற விலையில் தொடங்குகிறது. இதற்கிடையில், 4GB + 128GB மற்றும் 6GB + 128GB மாடல்களின் விலை முறையே ரூ. 10,800 மற்றும் ரூ. 12,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது Vivo தாய்லாந்து வெப்சைட் மற்றும் இ-ஸ்டோர் மூலம் அங்கே விற்பனை செய்யப்படுகிறது.
Vivo Y19s செல்போன் Glacier Blue, Glossy Black மற்றும் Pearl Silver ஆகிய மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
Vivo Y19s ஆனது 6.68 இன்ச் HD+ LCD திரையுடன் வருகிறது. இது 720 x 1,608 பிக்சல்கள் அளவு கொண்டது. 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 264ppi பிக்சல் அடர்த்தியை கொண்டுள்ளது. இது 12nm octa-core Unisoc T612 SoC சிப்செட் உள்ளது. 6GB வரை LPDDR4X ரேம் மற்றும் 128GB வரை eMMC 5.1 மெமரியை பயன்படுத்தமுடியும். ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான Funtouch OS 14 மூலம் இயக்கப்படுகிறது.
கேமரா பொறுத்தவரையில் Vivo Y19s ஆனது f/1.8 துளையுடன் கூடிய 50-மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமரா மற்றும் f/3.0 துளையுடன் கூடிய 0.08-மெகாபிக்சல் டெப்த் சென்சார் உட்பட இரட்டை பின்புற கேமரா யூனிட்டைப் பெறுகிறது. முன் கேமரா செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.
Vivo Y19s ஆனது 15W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. 5-ஸ்டார் SGS டிராப் ரெசிஸ்டன்ஸ் மற்றும் MIL-STD 810H மிலிட்டரி-கிரேடு சான்றிதழுடன் தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் 5.2, GPS மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவை உள்ளது. Vivo Y19s செல்போன் 198 கிராம் எடை கொண்டதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.
இது பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா, வியட்நாம், மியான்மர், பாகிஸ்தான், சவுதி அரேபியா, கம்போடியா, எகிப்து, தாய்லாந்து, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் கிடைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்