Vivo Y19, 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Vivo Y19 இரண்டு நிறங்களில் வருகிறது
Vivo Y19 தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்படுள்ளது. இந்த தொலைப்பேசி Vivo U3-ன் மறுபெயரிட்ட பதிப்பாகத் தெரிகிறது.
இந்தியாவில் Vivo Y19-ன் விலை:
Vivo Y19-ன் தாய்லாந்தில் THB 6,999 (சுமார் ரூ. 16,400)-யாக நிர்ணயிக்கப்படுள்ளது. Lazada சில்லறை தளத்தில் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்படுகிறது. இந்த போன் Magnetic Black மற்றும் Spring White gradient finishes-ல் கிடைக்கும். மேலும், நவம்பர் 5 முதல் விற்பனைக்கு வரும்.
Vivo Y19-ன் விவரக்குறிப்புகள்:
குறிப்பிட்டுள்ளபடி, Vivo Y19 விவரக்குறிப்புகள் கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo U3 ஸ்மார்ட்போனுடன் பொருந்துகின்றன. டூயல் சிம் (நானோ) Vivo Y19, FunTouch உடன் OS 9 Android 9 Pie-யால் இயங்குகிறது. இது 19:5:9 aspect ratio உடன் 6.53-inch Full-HD + (1080 x 2340 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. Vivo Y9, octa-core Qualcomm Snapdragon 675 SoC க்கு பதிலாக, MediaTek Helio P65 SoC-யால் இயக்கப்படுகிறது. தொலைபேசி 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது.
Vivo Y19-ல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, f/1.78 aperture உடன் 16-megapixel பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. f/2.2 aperture உடன் 8-megapixel wide-angle snapper இணைக்கப்படுள்ளது மேலும், 2-megapixel depth சென்சாரும் உள்ளது. முன்பக்கத்தில், f/2.0 aperture உடன் 16-megapixel கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு waterdrop-style notch வைக்கப்பட்டுள்ளது.
Vivo Y19 ஆனது 18W Dual Engine Flash சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டு வெளிவருகிறது. அங்கிகாரத்திற்காக, fingerprint சென்சார் பின்புறத்தில் பொருத்தபடுள்ளது. இந்த போன் face unlock-ஐ ஆதரிக்கிறது ஆனால், USB Type-C port-க்கு பதிலாக, charging மற்றும் file transfer-க்காக Micro-USB port-ஐ கொண்டுள்ளது. இது, 162.15x76.47x8.89mm அளவீட்டையும், 193 கிராம் எடையையும் கொண்டுள்ளது. மற்ற இணைப்பு விருப்பங்களில் Bluetooth 5.0, 2.4GHz and 5GHz dual-band Wi-Fi, GPS, USB OTG, FM radio மற்றும் பல உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Paramount's New Offer for Warner Bros. Is Not Sufficient, Major Investor Says
HMD Pulse 2 Specifications Leaked; Could Launch With 6.7-Inch Display, 5,000mAh Battery