Vivo X300 மற்றும் X300 Pro ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை லீக் ஆகியுள்ளது
Photo Credit: Vivo
Vivo X300 ₹75,999 മുതൽ; Dimensity 9500, 120Hz LTPO, 200MP ക്യാമറ സവിശേഷതകൾ
எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருந்த Vivo X300 Series லான்ச் அப்டேட் வந்திருக்கு. இந்த கேமரா ஃபிளாக்ஷிப் போன்கள் வரும் டிசம்பர் 2 அன்று இந்தியால அறிமுகமாகப் போறது உறுதி. இந்த நிலையில, இப்போ போனோட இந்திய விலை என்னன்னு லீக் ஆகி, எல்லாரையும் ஷாக் ஆக்கிருக்கு. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (Abhishek Yadav) மூலமா இந்த விலை லீக் ஆகியிருக்கு. இது போன X200 சீரிஸை விட கணிசமான Price Hike ஆகும்.
இந்த விலைகள் OnePlus 15 மற்றும் Oppo Find X9 போன்ற போட்டியாளர்களுக்கு இணையாக அல்லது அதைவிட அதிகமாக உள்ளன. இரண்டு போன்களும் MediaTek Dimensity 9500 சிப்செட் உடன் வருகின்றன. V3+ Imaging Chip மற்றும் VS1 சிப்செட் ப்ராசஸிங்க்கு உதவும். பேட்டரி & சார்ஜிங்: X300-ல் 6,040mAh பேட்டரி, X300 Pro-ல் 6,510mAh பேட்டரி இருக்கலாம். இரண்டுலயும் 90W Fast Charging மற்றும் 40W Wireless Charging ஆதரவு இருக்கும்.
கேமராதான் இந்த சீரிஸ்-ஓட மெயின் பவர். ZEISS உடன் இணைந்து இதை வடிவமைச்சிருக்காங்க.
Vivo, தனியா விற்கப்படும் Teleconverter Kit-ன் விலையை சுமார் ₹19,999 ஆக நிர்ணயம் செய்யலாம்னு சொல்லியிருக்காங்க. மொத்தத்துல, Vivo X300 Series Dimensity 9500 சிப்செட் மற்றும் 200MP Camera பவரோட வந்தாலும், இந்த ₹75,999 மற்றும் ₹1,09,999 விலைகள் தான் இப்போதைக்கு பெரிய பேசுபொருளா இருக்கு. இந்த விலைகள் நியாயமான்னு நீங்க நினைக்கிறீங்களா? Vivo X300 Pro-வை ₹1,09,999 கொடுத்து வாங்குவீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Neutrino Detectors May Unlock the Search for Light Dark Matter, Physicists Say
Uranus and Neptune May Be Rocky Worlds Not Ice Giants, New Research Shows
Steal OTT Release Date: When and Where to Watch Sophie Turner Starrer Movie Online?
Murder Report (2025): A Dark Korean Crime Thriller Now Streaming on Prime Video