Vivo நிறுவனத்தின் X21 ஸ்மார்ட் போன் இந்த மாதம் 29 ஆம் தேதி சந்தைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் இந்த ஸ்மார்ட் போன் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டு சக்கைப்போடு போட்டது. இம்மாத ஆரம்பத்தில் சர்வதேச சந்தைகள் பலவற்றில் இந்த ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், வரும் 29 ஆம் தேதி இந்திய மார்க்கெட்டுக்கு இந்த போன் வரவுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் கவனிக்கத்தக்க வசதிகளில் ஒன்று அண்டர் டிஸ்ப்ளே ஃபிங்கர் சென்சார் தான். இது இந்த ஆண்டு ஆரம்பத்தில் Vivo நிறுவனத்தால் வெளியிடப்பட்ட X20 ப்ளஸ் போனில் தான் இந்த ஸ்பெஷல் சென்சார் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சென்சார் மூலம், வெறுமனே போனுக்குப் பின்னால் இருக்கும் பட்டனை தொட்டால், டிவைஸ் அன்லாக் ஆகும். இதுதான் கூகுல் நிறுவனம் முதன் முதலில் பி பேட்டா அப்படேட் கொடுக்கும் போனும் ஆகும்.
இந்த போன் CES 2018 நிகழ்ச்சியில் முதன்முறையாக விவோ நிறுவதனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு சீனாவில் இந்த போன் முதன்முறையாபக விற்பனைக்கு விடப்பட்டது. ஆனால், ஏதோ காரணத்துக்காக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த ஸ்மார்ட் போனின் விலை என்னவாக இருக்கும் என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. ஆனால், இது Honor 10 மற்றும் OnePlus 6 ஆகிய ஸ்மார்ட் போன்களின் விலையுடன் போட்டி போடும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த இரண்டு போன்களும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்