விவோ அதன் அடுத்த ஸ்மார்ட் போனான X21-ஐ வெளியிட்டு உள்ளது
கடந்த சில வாரங்களில் தொடர்ந்து பல ஸ்மார்ட் போன்கள் ரிலீஸ் ஆகிக் கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் ஸ்மார்ட் போன்களுக்கு இருக்கும் மார்கெட்டை பிடிக்க உள்ளூர் நிறுவனங்களிலில் இருந்து சர்வதேச கம்பெனிகள் வரை போட்டா போட்டி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், விவோ அதன் அடுத்த ஸ்மார்ட் போனான X21-ஐ வெளியிட்டு உள்ளது. சமீபத்தில் தான் விவோ, V9 போனை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஒன்ப்ளஸ் 6 மற்றும் ஹானர் 10 ஆகிய போன்களும் ரிலீஸாகி மார்க்கெட்டை அதகளப்படுத்தி வருகின்றன.
![]()
இந்நிலையில், X21 எங்கள் கையில் கிடைத்தது. சற்று அலசிப் பார்த்தோம்…
X21-ன் மிக முக்கிய ஹைலைட்டாக பார்க்கப்பட்டது அதன் விரல் ரேகை சென்ஸார் தான். டிஸ்ப்ளேவுக்குக் கீழேயே இது பிரத்யேக டிசைனில் கொடுக்கப்பட்டு உள்ளது பலரை திரும்பிப் பார்க்க வைத்தது. இதுவரை V தொடர் போன்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த விவோ, தற்போது X தொடர் போன்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து உள்ளதை அதன் பெயரே உணர்த்துகிறது.
X21 போன் பேக்கிலேயே ஒரு விஷயத்தைப் பார்க்க முடிகிறது. ஃபிபா-வின் லோகோ மிகப் பெரியதாக இந்த போன் இருக்கும் அட்டையில் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்குக் காரணம், இந்த ஆண்டு ரஷ்யாவில் நடக்கப் போகும் ஃபிபா உலக கோப்பை போட்டியின் ஸ்பான்சர்களில் விவோ நிறுவனமும் ஒன்று என்பதால் தான்.
![]()
ஒரு இயர்-போன், சார்ஜர் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி கேபிள் ஆகியவை போனுடன் கொடுக்கப்பட்டு உள்ளது.
6.28 இன்ச் அளவும கொண்ட் AMOLED டிஸ்ப்ளே, நம்மை எடுத்த எடுப்பில் கவர்கிறது. Snapdragon 660 SoC, octa-core ப்ராசஸரில் தான் இந்த போன் இயங்குகிறது. 6 ஜிபி ரேம் உடனும் 128 ஜிபி சேமிப்பு வசதியுடனும் அமைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அபரேடிங் மென்பொருளில் X21 இயங்குவதால், சீக்கிரமே ஒரு அப்டேட்டை எதிர்பார்க்கலாம்.
![]()
மொத்தம் மூன்று கேமராக்கள். ஒரு செல்ஃபி கேமரா. 12 மெகா பிக்சல் திறன் கொண்டது. இரண்டு பின்புற கேமரா. முறையே 12 மற்றும் 5 மெகா பிக்சல் திறன் கொண்டவையாக இருக்கின்றன. 3200mAh ஆற்றல் கொண்ட பேட்டரி, வெகு நேரம் போன் பயன்படுத்து ஏதுவாக இருக்கும். மேலும் இந்த போனை பற்றி தெரிந்து கொள்ள, இப்போதைக்கு எங்களைப் போல நீங்களும் காத்திருங்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Giant Ancient Collision May Have ‘Flipped’ the Moon’s Interior, Study Suggests