Photo Credit: Vivo
Vivo V50 (படம்) முந்தைய V40 மாடலைப் போலவே உள்ளது
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Vivo V50 செல்போன் பற்றி தான்.
விவோ தனது வரவிருக்கும் V-சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் V50 பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. விவோ வி50 ஸ்மார்ட்போன் ஐபி68 மற்றும் ஐபி69 தரநிலை கொண்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும். இந்த போனின் செயலி, சார்ஜிங் வேகம், வண்ண விருப்பங்கள் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
Vivo V50 செல்போன் வடிவமைப்பு முந்தைய மாடலைப் போலவே தோன்றுகிறது. ஆனால் வட்டமான தோற்றத்தைப் பெறுகிறது. அதன் வடிவமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் தெரிகிறது. Vivo V40 போல இரண்டு பக்கங்களுக்குப் பதிலாக நான்கு பக்கங்களிலும் உள்ள விளிம்புகளில் காட்சி சற்று வளைந்திருக்கும். தூசி மற்றும் தண்ணீருக்கான அதிகாரப்பூர்வ IP68 மற்றும் IP69 மதிப்பீட்டுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது ரோஸ் ரெட், ஸ்டாரி ப்ளூ மற்றும் டைட்டானியம் கிரே வண்ணங்களில் கிடைக்கும்.
பின்புறத்தில், கீஹோல் வடிவ கேமரா தொகுதி முன்பு போலவே உள்ளது. கேமரா பீச்சர்களை பார்க்கையில், ஜீஸ் மல்டிபோகல் போர்ட்ராய்டு (ZEISS Multifocal Portrait) கிடைக்கிறது. ஆகவே, பொக்கெ எபெக்ட் போட்டோக்களின் அவுட்புட் பிரீமியமாக கிடைக்கிறது. இதில் ஸ்ட்ரீட் போர்ட்ராய்டு (Sreet Portrait), கிளாசிக் போர்ட்ராய்டு (Classic Portrai), லேண்ட்ஸ்கேப் போர்ட்ராய்டு (Landscape Portait) போன்றவை போகல் லென்த் மாற்றப்பட்டு கிடைக்கின்றன..
மூன்று கேமராக்களும் 50 மெகாபிக்சல் சென்சார்களை கொண்டுள்ளது. இதில் 50 மெகாபிக்சல் கேமரா, 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா ஆகியவை அடங்கும். விவோவின் ஆரா லைட் அம்சமும் உள்ளது, ஆனால் முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது அளவில் மிகவும் பெரியதாகத் தெரிகிறது.
மிட்-ரேஞ்ச் போன்களில் கிடைக்கும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி சப்போர்ட் உள்ளது. அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording), ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது. 50 எம்பி குரூப் செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த கேமராவிலும் ஆட்டோபோகஸ், ஜீஸ் சப்போர்ட் கிடைக்கிறது.
மேலும் 6,000mAh பேட்டரி, Funtouch OS 15 மற்றும் நிறுவனத்தின் முதன்மை மாடலான Vivo X200 Proல் சமீபத்தில் வந்த சில AI மற்றும் கேமரா அம்சங்கள் ஆகியவை இதில் அடங்கும். முந்தைய அறிக்கையின்படி , Vivo V50 குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 SoC-ஐக் கொண்டிருக்கும் என்று தெரியவந்தது. மற்றொரு அறிக்கையின்படி, இந்த போன் பிப்ரவரி 18 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்