Photo Credit: Vivo
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Vivo X200 செல்போன் சீரியஸ் பற்றி தான்.
Vivo X200, X200 Pro மற்றும் 200 Pro Mini செல்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் வெளியீட்டு தேதியை Vivo இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகமாகும் என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. Vivo X200 வரிசையில் உள்ள மூன்று ஃபோன்களும் புதிய MediaTek Dimensity 9400 SoC மூலம் இயங்குகின்றன. ஜெர்மன் கேமரா பிராண்டான Zeiss உடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட கேமரா அமைப்புகளை கொண்டுள்ளன.
Vivo X200 சீரியஸ் இந்தியாவில் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று 91Mobiles கூறுகிறது. Vivo X100 மற்றும் Vivo X100 Pro ஆகியவை நவம்பர் 2023ல் சீனாவில் அறிமுகமானது. அதன் பிறகு பிறகு இந்த ஆண்டு ஜனவரியில் மற்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.
Vivo X200 தொடர் இந்த வார தொடக்கத்தில் சீனாவில் ரூ. 51,000 விலையில் அறிமுகம் ஆனது. வெனிலா Vivo X200 மாடல் 12GB ரேம் 256GB மெமரி மாடல் இந்த விலைக்கு கிடைக்கிறது. Vivo X200 Pro விலை ரூ. 63,000க்கு தொடங்குகிறது, அதே நேரத்தில் Vivo X200 Pro Mini அடிப்படை மாடல் ரூ. 56,000 விலையில் ஆரம்பம் ஆகிறது.
Vivo X200 செல்போன் சீரியஸ்சில் உள்ள மூன்று போன்களும் MediaTek Dimensity 9400 SoC சிப் மூலம் இயங்கும் வசதியைக் கொண்டுள்ளன. 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன.
அடுத்த தலைமுறை மீடியாடெக் சிப்செட்டைக் கொண்ட செல்போன்கள் என்கிற பெருமையை பெறுகின்றன. மூன்று செல்போன்களிலும் கேமரா யூனிட் Zeiss நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை Origin OS 5 மூலம் இயங்குகின்றன.
வெண்ணிலா Vivo X200 செல்போன் மாடல் 90W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, Vivo X200 Pro மற்றும் X200 Pro Mini ஆகியவை முறையே 6,000mAh மற்றும் 5,800mAh பேட்டரிகளை கொண்டுள்ளன. மேலும் 90W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. மேலும் Vivo நிறுவனத்தின் சொந்த கண்டுபிடிப்பான Circle to Search உட்பட செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இந்த செல்போன்கள் இயக்கப்படுகிறது. மூன்று ஸ்மார்ட்போன்களும் கார்பன் பிளாக், டைட்டானியம் கிரே, மூன்லைட் ஒயிட் மற்றும் சபையர் ப்ளூ ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கின்றன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்