ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுக்கும் Vivo X200 செல்போன் சீரியஸ்

Vivo X200 , Vivo X200 Pro மற்றும் Vivo X200 Pro Mini ஆகியவை விரைவில் உலகம் முழுக்க அறிமுகம் செய்யப்பட உள்ளது

ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுக்கும் Vivo X200 செல்போன் சீரியஸ்

Photo Credit: Vivo

விவோ தனது X200 ஃபிளாக்ஷிப் தொடரை அக்டோபரில் அதன் உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தியது

ஹைலைட்ஸ்
  • உலகம் முழுவதும் Vivo X200 செல்போன் சீரியஸ் விரைவில் அறிமுகம்
  • MediaTek Dimensity 9400 SoC சிப்செட் மூலம் இயங்கும் என எதிர்பார்ப்பு
  • Vivo X200 செல்போன் மாடல் 5,800mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்
விளம்பரம்

Vivo X200 , Vivo X200 Pro மற்றும் Vivo X200 Pro Mini ஆகியவை விரைவில் உலகம் முழுக்க அறிமுகம் செய்யப்பட உள்ளது. உலகளாவிய வெளியீடு எப்போது நடைபெறும் என்பதை Vivo இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சமீபத்திய தகவல் படி, விவோ நிறுவனத்தின் இந்திய வெளியீடு அடுத்த மாதம் நடக்கும் என்று கூறுகிறது. இருப்பினும் அனைத்து Vivo X200 செல்போன் சீரியஸ்களும் இந்தியாவில் கிடைக்காது என்று அறிக்கை தெரிவிக்கிறது. Vivo X200 செல்போன் சீரியஸ் MediaTek Dimensity 9400 SoCs, Origin OS 5 UI மற்றும் Zeiss-பிராண்டட் கேமராக்களில் இயங்குகிறது. விவோ எக்ஸ்200 மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோவை டிசம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று 91மொபைல்ஸ் தெரிவிக்கிறது. இந்திய சந்தையில் எக்ஸ்200 ப்ரோ மினி அறிமுகம் ஆகாது என கூறப்படுகிறது.


Vivo X200 செல்போன் சீரியஸ் அக்டோபரில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது சீனாவில் பிரத்தியேகமாக விற்பனைக்கு உள்ளது. இந்த சீரியஸ் விரைவில் மலேசிய சந்தையில் இறங்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் Vivo X200 Pro Mini செல்போன் மாடல் உலகளாவிய வெளியீட்டின் ஒரு பகுதியாக இருக்குமா என்பது இப்போது தெளிவாகத் தெரியவில்லை. இந்த போன்கள் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. இருந்தாலும் Vivo அதன் Vivo X200 சீரியஸ் இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்பது பற்றிய எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. முந்தைய Vivo X சீரியஸ் போன்கள் இந்திய சந்தையில் இப்போது விற்பனையில் கொடி கட்டி பறக்கிறது.

Vivo X200 விவரக்குறிப்புகள்

Vivo X200 செல்போன் சீரியஸ் வெண்ணிலா மாடல் 12GB ரேம் + 256GB மெமரி மாடல் ரூ. 51,000 என்கிற விலையில் தொடங்குகிறது. Vivo நிறுவனத்தின் X200, X200 Pro , மற்றும் X200 Pro Mini ஆனது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையாகக் கொண்ட Origin OS 5 உடன் வெளியிடப்பட்டது. மூன்று ஃபோன்களும் MediaTek Dimensity 9400 SoC இல் இயங்குகின்றன மற்றும் Zeiss-பிராண்டட் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. Vivo X200 Pro ஆனது 200 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் கொண்டது.


வெண்ணிலா மாடல் Vivo X200 ஆனது 90W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதற்கிடையில் Vivo X200 Pro மற்றும் X200 Pro Mini ஆகியவை முறையே 6,000mAh மற்றும் 5,800mAh பேட்டரி 90W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகின்றன. இந்தியாவில் விவோ எக்ஸ்200 மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இமோர்ட்டாலிஸ் G925 GPU தரவு கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி கொண்டுள்ளது இந்த விவோ போன். IP69+IP68 தர Dust & Water Resistant கொண்டுள்ளது

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff
 ...மேலும்
        
    

தொடர்புடைய செய்திகள்

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  2. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  3. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  4. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  5. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  6. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  7. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  8. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  9. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  10. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »