Vivo X Fold 5 போன் விரைவில் அறிமுகமாகப் போகுதுன்னு தகவல்கள் வெளியாகி இருக்கு
Photo Credit: Vivo
விவோ சீனாவில் விவோ எக்ஸ் ஃபோல்ட் 5-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது
போல்டபிள் ஸ்மார்ட்போன் சந்தையில Vivo நிறுவனம் ஒரு பெரிய பங்காற்றிட்டு வராங்க. அவங்களோட X Fold சீரிஸ் எப்பவுமே புதுமையான அம்சங்களோட வரும். அந்த வரிசையில, Vivo X Fold 5 போன் விரைவில் அறிமுகமாகப் போகுதுன்னு தகவல்கள் வெளியாகி இருக்கு. இந்த போனோட டிசைன், டிஸ்ப்ளே தொழில்நுட்பம், மற்றும் பாதுகாப்பு சான்றிதழ்கள் பத்தி Vivo-வே சில டீசர்களை வெளியிட்டு இருக்காங்க. வாங்க, இந்த புது Vivo X Fold 5 பத்தி டீட்டெய்லா பார்ப்போம்.
Vivo X Fold 5: டிசைன் டீசர்கள் மற்றும் முக்கிய அம்சங்கள்!Vivo-வின் ப்ராடக்ட் மேனேஜர் Han Boxiao, Weibo-ல Vivo X Fold 5-ன் உள் டிஸ்ப்ளேவின் புகைப்படத்தை வெளியிட்டு, பல தகவல்களை உறுதிப்படுத்தியிருக்கார். இந்த போன், டிசைன் மற்றும் டூரபிலிட்டில புது அத்தியாயத்தை உருவாக்கும்னு எதிர்பார்க்கப்படுது.
8T LTPO AMOLED டிஸ்ப்ளே: Vivo X Fold 5-ன் உட்புற மற்றும் வெளிப்புற டிஸ்ப்ளேக்கள் இரண்டுமே அதிநவீன 8T LTPO AMOLED பேனல்களைக் கொண்டிருக்கும். இது அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்டை சப்போர்ட் பண்ணும். அதாவது, நீங்க பாக்குற கன்டென்ட்டுக்கு ஏத்த மாதிரி ரெஃப்ரெஷ் ரேட் தானா மாறும். இது ஸ்க்ரோலிங் மற்றும் கேமிங் அனுபவத்தை ரொம்பவே ஸ்மூத்தாக்கும்.
அதிக பிரைட்னஸ்: இந்த டிஸ்ப்ளேக்கள் 4,500 நிட்ஸ் லோக்கல் பீக் பிரைட்னஸை அடையும்னு சொல்லியிருக்காங்க. இதனால, வெயில்ல கூட டிஸ்ப்ளே ரொம்ப தெளிவா தெரியும்.
IP5X மற்றும் IPX9+ சான்றிதழ்கள்: இது ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட்! Vivo X Fold 5, தூசிக்கு எதிரான IP5X சான்றிதழ் மற்றும் உயர் அழுத்த நீர் ஜெட்ஸ்களுக்கு எதிரான IPX9+ சான்றிதழ்களுடன் வரும். இது ஒரு ஃபோல்டபிள் போனுக்கு ரொம்பவே தேவையான பாதுகாப்பு.
பயங்கரமான சகிப்புத்தன்மை: Vivo சொல்றாங்க, இந்த ஃபோல்டபிள் போனை ஒரு மீட்டர் ஆழ தண்ணிக்குள்ள வச்சுக்கிட்டு 1,000 முறை மடிச்சு திறந்து பார்த்திருக்காங்க. ஆனாலும் அது எந்த பிரச்சனையும் இல்லாம இயங்குச்சாம்!
தீவிர குளிர் தாங்கும் சக்தி: -20°C மாதிரி மிகக் கடுமையான குளிர்லயும் இந்த போன் நல்லா வேலை செய்யும்னு Vivo உறுதிப்படுத்தியிருக்காங்க. இதுல புதுசா 'இரண்டாம் தலைமுறை செமி-சாலிட் பேட்டரி தொழில்நுட்பம்' பயன்படுத்தப்பட்டிருக்குதாம்.
ஸ்லிம் மற்றும் எடை குறைவு: Vivo X Fold 5, அதோட முந்தைய மாடலான X Fold 3-ஐ விட மெலிதாகவும், எடை குறைவாகவும் இருக்கும்னு சொல்லியிருக்காங்க. X Fold 3 219g இருந்த நிலையில், இது 209g இருக்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Find X9, Oppo Find X9 Pro Go on Sale in India for the First Time Today: See Price, Offers, Availability