விவோ வி 19, 48 மெகாபிக்சல் மெயின் ஷூட்டருடன் குவாட் கேமரா அமைப்பை பேக் செய்கிறது.
விவோ வி 19 மிஸ்டிக் சில்வர் மற்றும் பியானோ பிளாக் கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படும்
இறுதியாக விவோ வி 19 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் சமீபத்திய மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போனில், ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் உள்ளது. இந்த போன் சமீபத்தில் உலகின் பிற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக வெளியீடு தாமதமாக இருந்தாலும், இறுதியாக இந்த போன் இந்தியாவுக்கு வந்தது. இப்போதைக்கு, பச்சை மண்டலம் மற்றும் ஆரஞ்சு மண்டலத்தில் விற்பனை தொடங்கும்.
8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Vivo V19-ன் விலை ரூ.27,990 ஆகும். 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜுடன் இந்த போனை ரூ.31,990-க்கு வாங்கலாம். இந்த போன் கருப்பு மற்றும் வெள்ளி வண்ணங்களில் கிடைக்கும். நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட் மற்றும் பிற இ-காமர்ஸ் வலைத்தளங்களிலிருந்து இந்த போன் மே 15 ஆம் தேதி விற்பனைக்கு வரும்.
டூயல்-சிம் Vivo வி 19, 6.44 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இந்த போன் ஆண்ட்ராய்டு 10 உடன் நிறுவனத்தின் ஃபன்டூச் ஓஎஸ் 10-ல் இயக்கும். போனின் உள்ளே ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் உள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜுடன் வருகிறது.
Vivo Will Let Customers Buy Phones From Retailers Without Leaving Their Home
விவோ வி 19 ஆண்ட்ராய்டு 10 udan ஃபன் டச் ஓஎஸ் 10-ல் இயங்குகிறது
இந்த போனில் 32 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்ட இரட்டை செல்பி கேமரா உள்ளது. 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமராவுடன் வருகிறது. போனின் பின்புறத்தில் உள்ள நான்கு கேமராக்களில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது.
இணைப்பிற்காக இந்த போனில் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளூடூத் வி 5.0, டூயல் பேண்ட் வைஃபை, ஜி.பி.எஸ் ஆகியவை உள்ளது. போனின் உள்ளே 4,500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. விவோ வி 19-ன் எடை 186.5 கிராம் ஆகும்.
Is Mi 10 an expensive OnePlus 8 or a budget budget S20 Ultra? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Xiaomi 18 Pro Max Geekbench Listing Reveals Key Details Ahead of Launch