இந்தியாவில் Vivo V19-ன் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், முந்தைய அறிக்கையின் படி அடிப்படை வேரியண்டிற்கு ரூ.25,000 செலவாகும்.
இந்தியாவில் விவோ வி 19 அதன் உலகளாவிய வேரியண்டிற்கு இணையானதாக இருக்கும்
Vivo வி 19, மே 12 (நாளை) இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. புதிய விவோ ஸ்மார்ட்போன் முதலில் மார்ச் 26 அன்று நாட்டில் அறிமுகப்படுத்தவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் ஊரடங்கால் வெளியீடு தாமதமானது. இ-காமர்ஸ் விநியோகத்தை அரசு தளர்த்தியுள்ளதால், சீன நிறுவனம் விவோ வி 19-ஐ அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
Realme மற்றும் Xiaomi போன்ற நிறுவனங்களைப் போலல்லாமல், விவோ வி 19 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதை அறிவிக்க ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீம் நிகழ்வை நடத்தவில்லை.
இந்தியாவில் Vivo V19-ன் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், முந்தைய அறிக்கையின் படி அடிப்படை வேரியண்டிற்கு ரூ.25,000 செலவாகும். இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜைக் கொண்டிருக்கும். இந்த போன் சில்வர் மற்றும் கருப்பு நிறத்தில் அறிமுகப்படுத்தலாம்.
விவோ வி 19, 6.44 இன்ச் முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்) சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனில் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இது, நிறுவனத்தின் ஃபன்டூச் ஓஎஸ் 10 உடன் Android 10-ல் இயங்குகிறது.போனின் உள்ளே ஆக்டா கோர் Qualcomm Snapdragon 712 செயலியுடன் 8 ஜிபி ரேம் உள்ளது.
போனின் முன் பேனலில் ஒரு பெரிய ஹோல்-பஞ்ச் கொடுக்கப்பட்டுள்ளது. இது 32 மெகாபிக்சல் முதன்மை செல்பி கேமரா மற்றும் அல்ட்ரா -8 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது. போனின் பின்புறத்தில் உள்ள நான்கு கேமராக்களில், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா ஆங்கிள் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. மேலும், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் உள்ளது.
போனில் 128 ஜிபி மற்றும் 245 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இரண்டு வகைகளும் மைக்ரோ எஸ்.டி கார்டை ஆதரிக்கின்றன. இணைப்பிற்காக, போனில் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைஃபை மற்றும் ஜிபிஎஸ் ஆதரவு ஆகியவை உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 33 வாட் விவோ ஃப்ளாஷ் சார்ஜ் உதவியுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. போனின் எடை 186.5 ஆகும்.
Is Mi 10 an expensive OnePlus 8 or a budget S20 Ultra? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Xiaomi 18 Pro Max Geekbench Listing Reveals Key Details Ahead of Launch