Vivo V17 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Vivo S1 Pro-வின் ரஷ்ய வேரியண்டான அசல் Vivo V17 போலல்லாமல், இந்தியாவில் அனைத்து புதிய வடிவமைப்பிலும் வருகிறது மற்றும் மேம்படுத்தப்பட்ட விவரக்குறிப்புகளின் பட்டியலையும் கொண்டுள்ளது. இதன் பொருள் Vivo V17-ன் இந்தியா வேரியண்டில், hole-punch டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் L-shaped குவாட் ரியர் கேமரா அமைப்பைப் பெறுவீர்கள். விவோ தனது அனைத்து புதிய iView டிஸ்ப்ளேவையும் வழங்கியுள்ளது, இது ஒரு செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது மற்றும் இது E3 சூப்பர் AMOLED பேனலால் இயக்கப்படுகிறது.
இந்தியாவில் Vivo V17-ன் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 22,990-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Midnight Ocean (Black) மற்றும் Glacier Ice (White) வண்ண விருப்பங்களில் வருகிறது. மேலும், இது டிசம்பர் 17 முதல் நாட்டில் விற்பனைக்கு வரும். முன்பதிவு இப்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நாட்டின் அனைத்து முக்கிய ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக வழங்கப்படும்.
Vivo V17-ன் விற்பனை சலுகைகளில் HDFC வங்கி, ICICI வங்கி, HDFC வங்கி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற வங்கிகள் மூலம் செய்யப்படும் கட்டணங்களில் 5 சதவீதம் கேஷ்பேக் அடங்கும். கூடுதலாக, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவிலிருந்து டேட்டா சலுகைகள் இருக்கும்.
நினைவுகூர, அசல் Vivo V17 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷனை RUB 22,990 (சுமார் ரூ. 25,700)-க்கு ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கடந்த மாதம் பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo S1 Pro-வின் புதிய வேரியண்டாக கொண்டு வரப்பட்டது.
டூயல்-சிம் (நானோ) Vivo V17, Funtouch OS 9.2 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. இந்த போன் 20:9 aspect ratio உடன் 6.44-inch full-HD+ (1080x2400 pixels) E3 Super AMOLED iView டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. டிஸ்பிளே பேனலில் 100 சதவீதம் DCI-P3 வண்ண வரம்பு உள்ளது. மேலும், இது 42 சதவீத நீல ஒளியை வடிகட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது. இருட்டில் கூடுதல் பாதுகாப்பை வழங்க low brightness anti-flicker தொழில்நுட்பமும் உள்ளது. ஹூட்டின் கீழ், போனின் 8GB RAM உடன் இணைக்கப்பட்ட octa-core Qualcomm Snapdragon 675 SoC உள்ளது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Vivo V17-ன் குவாட் ரியர் கேமரா அமைப்பில், f/1.8 lens உடன் மேலே 48-megapixel முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது. ரியர் கேமரா அமைப்பில், f/2.2 lens உடன் 8-megapixel இரண்டாம் நிலை சென்சார், bokeh effect-க்காக f/2.4 lens உடன் 2-megapixel மூன்றாம் நிலை சென்சார் மற்றும் f/2.4 macro lens உடன் 2-megapixel குவாட்டர்னரி சென்சார் ஆகியவை உள்ளது. இந்த விவோ போனில் f/2.45 lens உடன் 32-megapixel செல்பி கேமராவும் உள்ளது.
Vivo V17-ல் 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, dual-band Wi-Fi, Bluetooth v5.0, GPS/A-GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் in-display fingerprint சென்சாருடன் வருகிறது. தவிர, 4,500mAh பேட்டரியை பேக் செய்கிறது.
V17-ல் முன்பே ஏற்றப்பட்ட கேமரா அம்சங்களை Vivo வழங்கியுள்ளது. இதில் Super Night mode, Ultra Stable Video, Portrait Bokeh, Portrait Light Effects, AR Stickers, Pose Master, AI Makeup மற்றும் AI HDR ஆகியவை அடங்கும். மேலும், கைபேசியில் Super Night Selfie, AI HDR மற்றும் Gender Detection போன்ற சில முன் ஏற்றப்பட்ட செல்பி-ஃபோகஸ் அம்சங்களும் உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்