4,500mAh பேட்டரியுடன் டிசம்பர் 9-ல் வெளியாகிறது Vivo V17! 

4,500mAh பேட்டரியுடன் டிசம்பர் 9-ல் வெளியாகிறது Vivo V17! 

Vivo V17, Snapdragon 665 SoC-யால் இயங்குகிறது

ஹைலைட்ஸ்
  • விவோ, இந்திய ஊடக நிறுவனங்களுக்கு வெளியீட்டு அழைப்புகளை அனுப்பியுள்ளது
  • நிறுவனம் டிசம்பர் 9 அன்று ஒரு நிகழ்வை நடத்துகிறது
  • Vivo V17, hole-punch டிஸ்ப்ளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விளம்பரம்

விவோ, டிசம்பர் 9-ஆம் தேதி இந்தியாவில் வி-சீரிஸ் வெளியீட்டு நிகழ்வுக்கான ஊடக அழைப்புகளை அனுப்பியுள்ளது. மேலும், நிறுவனம் Vivo V17-ஐ அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் சில நாட்களுக்கு முன்பு ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது dewdrop notch மற்றும் பின்புறத்தில் வைர வடிவ கேமரா தொகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போன் சிறிது நேரத்திற்கு முன்பு பிலிப்பைன்ஸில் Vivo S1 Pro குளோபல் வேரியண்டாகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

விவோவின் அழைப்பு டிசம்பர் 9-ஆம் தேதி இந்தியாவில் ஒரு புதிய வி-சீரிஸ் தொலைபேசி அறிமுகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்துகிறது. அழைப்பிதழ் போனின் பெயரை வெளிப்படுத்தவில்லை என்றாலும், Vivo V17 ஒரு வெளியீட்டைக் காணும். அழைப்பிதழ் போஸ்டர், போனில் ஒரு hole-punch டிஸ்பிளேவைக் குறிக்கிறது. அதே நேரத்தில் ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo V17, waterdrop-style notch-ஐக் கொண்டுள்ளது.

Samsung Galaxy S10-ஐப் போலவே, பிரீமியம் தோற்றத்தையும் உணர்வையும் தரும் வகையில், waterdrop-style notch-க்கு பதிலாக, Vivo V17-ஐ இந்தியாவில் hole-punch டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்த விவோ எதிர்பார்க்கிறது என்று சமீபத்திய 91Mobiles அறிக்கை தெரிவிக்கிறது. விவரக்குறிப்புகள் ரஷ்யா வேரியண்டிற்கு இணையானதாக இருக்க வேண்டும் என்று அறிக்கை அறிவுறுத்துகிறது. டிப்ஸ்டர் இஷான் அகர்வாலின் (tipster Ishan Agarwal) மற்றொரு சமீபத்திய அறிக்கை, Vivo S1 Pro விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அந்த மாடல் Vivo V17 என மறுபெயரிடப்படுவதால், இது  Vivo V17 இந்தியா வெளியீட்டு ஊகங்களுடன் பொருந்துவதாகத் தெரிகிறது. நினைவுகூர, பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo S1 Pro உலகளாவிய வேரியண்ட் மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo S1 Pro சீனா வேரியண்டிலிருந்து வேறுபட்டது.

நினைவுகூர, Vivo V17 Pro ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த வேரியண்டில் டூயல் பாப்-அப் செல்பி கேமராக்கள் மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. போனின் விலை ரூ. 29,990, மற்றும் Vivo V17 Pro-வை விட Vivo V17 விலை குறைவாக இருக்கும்.


Vivo V17-ன் விவரக்குறிப்புகள்:

Vivo V17, Android 9 Pie-ஐ அடைப்படையாகக் கொண்ட FuntouchOS 9.2-ல் இயங்குகிறது. இது 6.38-inch full-HD+ (1080x2340 pixels) Super AMOLED FullView டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது screen-to-body ratio of 90 சதவிகிதம் மற்றும் 19.5:9 aspect ratio-வைக் கொண்டுள்ளது. Vivo V17, in-display fingerprint scanner-ஐக் கொண்டுள்ளது. பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo S1 Pro-வைப் போலவே, தொகுக்கப்பட்ட 8GB RAM உடன் octa-core Qualcomm Snapdragon 665 SoC-ஐ V17 கொண்டுள்ளது.

பின்புறத்தில், Vivo V17 diamond-shaped quad rear கேமரா அமைப்பில், f/1.8 aperture உடன் 48-megapixel முதன்மை சென்சார், f/2.2 aperture மற்றும் 108-degree field of view (FoV) உடன் 8-megapixel ultra-wide-angle கேமராவைக் கொண்டுள்ளது. இது 2-megapixel macro கேமரா மற்றும் 2-megapixel sensor சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்காக, Vivo V17 ஸ்மார்ட்போனில் 32-megapixel செல்பி கேமரா சென்சார் உள்ளது.

128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இது microSD card slot பயன்படுத்தி 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது. V17 தொடர்பு இல்லாத பேமெண்டுகளுக்கான NFC-யையும் கொண்டுள்ளது மற்றும் இரட்டை வேக சார்ஜிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் Bluetooth 5.0, dual 4G VoLTE, dual-band Wi-Fi போன்றவை உள்ளன. இது USB Type-C port மற்றும் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளார்.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vivid display
  • Good battery life
  • Decent low-light camera performance
  • Bad
  • Below average low-light video
  • Preinstalled bloatware, spammy notifications
  • High price
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »