இன்று இரவு முதல் ஃபிளிப்கார்ட், அமேசான், பே டிஎம் மால், ஸ்னாப்டீல் மற்றும் விவோ இந்தியா போன்ற இணையதளங்களில் விவோ வி15 ப்ரோ விற்பனைசெய்யப்படுகிறது
ரூ.28,990க்கு விற்பனை செய்யப்படும் விவோ வி15 ப்ரோ
கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி15 ப்ரோ இன்று விற்பனைக்கு வெளியாகவுள்ளது. இன்று நள்ளிரவு முதல் விற்பனைக்கு வரும் நிலையில் இந்த விவோ வி 15 ப்ரோ தயாரிப்புகள் ஃபிளிப்கார்ட், அமேசான், பே டிஎம் மால், ஸ்னாப்டீல் மற்றும் விவோ இந்தியா போன்ற இணையதளங்களில் விற்பனைசெய்யப்படுகிறது.
விவோ நிறுவனம் சார்பாக வெளியான அறிக்கையின் படி, முன்பதிவில் இதுவரை சுமார் 1 லட்சம் போன்கள் புக் செய்யப்பட்டுள்ளன. இன்டிஸ்பிளே ஃபிங்கர்-பிரிண்ட் சென்சாருடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் நாளை முதல் ஆஃப்லைன் கடைகளில் விற்பனை செய்யப்படும்.
ரூ. 28,990க்கு விற்கப்படும் விவோவின் இந்த புதிய தயாரிப்பு, டோபாஸ் புளூ மற்றும் ரூபி ரேட் நிறங்களில் வெளியாகவுள்ளது.
அறிமுக விலையாக 5 சதவித தள்ளுபடியை ஹெச்டிஎஃப்சி வங்கி அளித்துள்ளது. மேலும் வட்டியில்லா தவணை திட்டம், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் என பல திட்டங்களுடன் இந்த போன் வெளியாகவுள்ளது.
விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் அமைப்புகள்:
கடந்த ஆண்டு வெளியான நெக்ஸ் வகை போனைப் போல இந்த விவோ வி15 ப்ரோ போனிலும் பாப் ஆப் செல்ஃபி கேமராக்கள் இடம்பெற்றுள்ளன.‘ஐந்தாவது தலைமுறை' ஃபிங்கர் பிரின்ட் சென்சார், முகத்தை வைத்து போனை திறக்கும் வசதி என பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான போன்.
மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பையில் (Pie) இந்த ஸ்மார்ட்போன் இயங்குகின்ற நிலையில், அமோலெட் திரை ஆக்டோ கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் ஓ.எஸ். பொருத்தப்பட்டுள்ளது.
மூன்று பின்புற கேமராக்கள் (48 மெகா பிக்சல் முதல்நிலை சென்சார், 12 மெகா பிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 8 மெகா பிக்சல் கடைநிலை சென்சாருடன்) மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்டுள்ளது. இத்துடன் 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Infinix GT 50 Pro Key Specifications Confirmed Ahead of October 27 India Launch