அறிமுக சலுகையாக விவோ வி15 போன்களை வாங்குபவர்களுக்கு வாங்கிய பிறகு ஸ்க்ரீன் ஏதாவது பாதிப்படைந்தால் ஒரு முறை முழுமையாக மாற்றி கொடுக்கப்படும்
இந்தியாவில் ரூ.23,990க்கு விவோ வி15 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது.
விவோ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான விவோ வி15 ஸ்மார்ட்போன் வகைகள் இந்தியாவில் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மாதம் அறிமுகமான இந்த புதிய பாப்-ஆப் செல்ஃபி கேமரா அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் பல ஆஃபலைன் கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் வெளியான விவோ தயாரிப்புகளில் மிகவும் முக்கிய தயாரிப்பான விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் தொடர்சியாக இந்த விவோ வி15 தயாரிப்பு வெளியாகியுள்ளது. மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் பல அதிரடி அமைப்புகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதிகொண்ட இந்த விவோ வி15 ஸ்மார்ட்போன், இந்தியாவில் ரூ.23,990க்கு விற்பனை செய்யப்படுகறிது. இந்த தயாரிப்பு ஃப்ரோசன் பிளாக், கிளாமர் ரெட் மற்றும் ராயல் புளூ ஆகிய நிறங்களில் அறிமுகமாகியுள்ள நிலையில் தற்போது ராயல் புளூ நிற மாடல் விற்பனைக்கு வெளியாகவில்லை.
கடந்த வாரம் முன்பதிவுக்கு வெளியாகிய இந்த ஸ்மார்ட்போன், விவோ இந்தியா இ-ஸ்டோர், அமேசான், ஃபிளாப்கார்ட் மட்டுமின்றி பேடிஎம் மால், டாடா CLiQ மற்றும் பல ஆஃப்லைன் கடைகளிலும் விற்பனைக்கு வெளியாகியுள்ளன.
அறிமுக சலுகையாக விவோ வி15 போன்களை வாங்குபவர்களுக்கு வாங்கிய பிறகு ஸ்க்ரீன் ஏதாவது பாதிப்படைந்தால் ஒரு முறை முழுமையாக மாற்றி கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி 15 மாதத்திற்குக் கூடுதல் கட்டணமில்லா தவணைத் திட்ட வசதி, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், 10,000 ரூபாய் மதிப்பிலான ஜியோ ஆஃபர்கள் மற்றும் பல வங்கிகளின் ஆஃபர்கள் இந்த போனுடன் வழங்கப்பட உள்ளன.
டூயல் நேனோ சிம் மற்றும் 6.53 முழு ஹெச்டி திரை கொண்டுள்ள இந்த விவோ வி15 ஸ்மார்ட்போன், கோர்னிங் கோரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 ஃபன்டச் ஓஎஸ்-ஐ பெற்றுள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியா டெக் ஹூலியோ பி70 SoC மற்றும் 6ஜிபி ரேம் வசதிகள் இருக்கின்றன.
பின்புறத்தில் மூன்று கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 12/8/5 மெகா பிக்சல் சென்சார்களை கொண்டுள்ளன. முன் புறத்தில் செல்ஃபிகளுக்காக 32 மெகா பிக்சல் பாப்-ஆப் கேமரா சென்சாரையும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. ஃபிங்கர் பிரின்ட் சென்சாரை பின்புறத்தில் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 64ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது. இதுமட்டுமின்றி விவோ வி15 ஸ்மார்ட்போன் 4,000mAh பேட்டரி வசதியையும் பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Google Fitbit Edge Set to Launch Today: Expected Price, Specifications
Apple Plans ‘Big’ iPhone Duo Retail Push Ahead of October 23 Sale, Report Says
Oppo Pad Mini Matte Display Edition, Oppo Enco X4 Features Teased Ahead of India Launch