இந்த ஸ்மார்ட்போன் 17,990 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.
'விவோ S1' ஸ்மார்ட்போனின் 6GB வகை இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெளியாகவுள்ளது.
'விவோ S1' ஸ்மார்ட்போன் கடந்த புதங்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, மூன்று பின்புற கேமராக்கள், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் சென்சார் மற்றும் கண்கவர் வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அறுமுக நிகழ்வில் இந்த நிறுவனம் வாக்குறுதியளித்ததைப் போலவே, சமீபத்திய விவோ ஸ்மார்ட்போன் இப்போது அங்கீகரிக்கப்பட்ட சில்லறை கடைகளில் கேஷ்பேக் சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடியுடன் கிடைக்கிறது. 'விவோ S1' ஸ்மார்ட்போனின் அடிப்படை 4GB RAM + 128GB சேமிப்பு வகை மட்டுமே ரிலையன்ஸ் டிஜிட்டல், பூர்விகா, பிக் சி, லாட், சங்கீதா, க்ரோமா மற்றும் விஜய் சேல்ஸ் ஆகிய கடைகளில் விற்பனையாகிறது.
'விவோ S1': விலை!
இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM + 128GB சேமிப்பு அளவில் மட்டுமே அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் ரிலையன்ஸ் டிஜிட்டல், பூர்விகா, பிக் சி, லாட், சங்கீதா, க்ரோமா மற்றும் விஜய் சேல்ஸ் ஆகிய கடைகளில் கிடைக்கபெறும் இந்த ஸ்மார்ட்போன் 17,990 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பச்சை (Cosmic Green) மற்றும் நீலம் (Skyline Blue) என இரு வண்ணங்களில் அறிமுகமானது.
இந்த ஸ்மார்ட்போனை எச்.டி.எஃப்.சி கார்டுகளை பயன்படுத்தி பெற்றால், 7.5 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் ஜியோ சந்தாதாரர்களுக்கு 10,000 ரூபாய் வரை சலுகைகள் வழங்கப்படவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 14 முதல், ஆன்லைன் சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 6GB வகை இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெளியாகவுள்ளது.
![]()
'விவோ S1': சிறப்பம்சங்கள்!
'விவோ S1' ஸ்மார்ட்போன் ஃபன்-டச் ஓ.எஸ் 9 (Funtouch OS 9) உடன், ஆண்ட்ராய்டு 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 6.38 FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), வாட்டர்-டிராப் ஸ்டைல் நாட்ச் திரை பொன்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P65 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
3 பின்புற கேமராக்களைக் கொண்டுள்ள 'விவோ S1' ஸ்மார்ட்போன், 16 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாவது கேமராவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 32 மெகாபிக்சல் அளவிலான செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன், வை-ஃபை, ப்ளூடூத் v5, மைக்ரோ USB, GPS உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. 4,500mAh அளவிலான பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த 'விவோ S1' ஸ்மார்ட்போனில், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது என்பது தனி சிறப்பு.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Find N5, Find X8 Series, and Reno 14 Models to Get ColorOS 16 Update in November: Release Schedule