Vivo S1 Pro இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வைர வடிவ பின்புற கேமரா அமைப்பைக் கொண்ட புதிய விவோ போன், கடந்த ஆண்டு ஆஃப்லைன் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட நிறுவனத்தின் S சீரிஸில் புதிய மாடலாக வருகிறது. இருப்பினும், Vivo S1 Pro-வை ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் சேனல்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.
இந்தியாவில் Vivo S1 Pro-வின் ஒரே 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 19,990-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் Mystic Black, Jazy Blue மற்றும் Dreamy White கலர் ஆப்ஷன்களில் வருகிறது. மேலும், ஜனவரி 4 சனிக்கிழமை (இன்று) முதல் Vivo India online store, Amazon மற்றும் Flipkart உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வரும்.
Vivo S1 Pro-வில் விற்பனை சலுகைகளில் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளில் 10 சதவிகித கேஷ்பேக் மற்றும் ஒரு முறை இலவச ஸ்கிரீன் மாற்றுதல் ஆகியவை அடங்கும். இந்த இரண்டு சலுகைகளும் ஆஃப்லனில் வாங்குவோருக்கு பொருந்தும். இதற்கு மாறாக, ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 31 வரை ஒரு முறை இலவச ஸ்கிரீன் மாற்றுதல் பெற உரிமை உண்டு. ரூ. 12,000 மதிப்புள்ள ஜியோ ஆஃபர்களும் ஜனவரி 31 வரை செல்லுபடியாகும். மேலும், வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு EMI வாங்குதல்களில் 10 சதவீத ஐசிஐசிஐ வங்கி கேஷ்பேக் மற்றும் ஒன்பது மாதங்கள் வரை no-cost EMI ஆப்ஷன்களை பெறலாம்.
டூயல்-சிம் (நானோ) Vivo S1 Pro, Funtouch OS 9.2 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 19.5:9 aspect ratio உடன் 6.38-inch full-HD+ (1080x2340 pixels) Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த ஸ்மார்ட்போன் 8GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது.
Vivo S1 Pro-வில் f/1.8 lens 48-megapixel முதன்மை சென்சார் மற்றும் f/2.2 lens உடன் 8-megapixel இரண்டாம் நிலை சென்சார் ஆகியவை குவாட் ரியர் கேமரா அமைப்பில் அடங்கும். கேமரா அமைப்பில், capturing macro மற்றும் bokeh shots-க்கு f/2.4 lenses உடன் இரண்டு 2-megapixel சென்சார்களும் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் வீடியோக்களுக்கு electronics image stabilisation (EIS) உள்ளது.
செல்ஃபிகளுக்காக, Vivo S1 Pro-வின் முன்புறத்தில், f/2.0 lens உடன் 32-megapixel செல்ஃபி கேமரா உள்ளது. முன் கேமரா, AI Face Beauty, HDR, AI Portrait Lighting மற்றும் Group Selfie ஆகியவற்றை ஆதரிக்கிறது.
Vivo S1 Pro, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi (dual-band), Bluetooth v5.0, GPS/ A-GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். போனில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light sensor, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும். மேலும், in-display fingerprint சென்சார் உள்ளது.
S1 Pro-வில் 18W டூயல் இன்ஞின் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 4,500mAh பேட்டரியை Vivo வழங்குகிறது. தவிர, இந்த போன் 159.25x75.19x8.68mm அளவீட்டையும், 186.7 கிராம் எடையையும் கொண்டதாகும்.
Vivo S1 Pro Global Variant With Diamond-Shaped Quad Rear Camera Setup Launched
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்