இது குறித்து கிஷ்மோசீனா வெளியிட்ட தகவலில் "4GB RAM + 128GB சேமிப்பு அளவை கொண்ட 'விவோ S1' ஸ்மார்ட்போன் மட்டுமே முன்பதிவிற்காக வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியிட்டுள்ளது.
'விவோ S1' 17,000 ரூபாய் என்ற விலையில் இந்தியாவில் அறிமுகமாகலாம்
ஆகஸ்ட் 7 அன்று அறிமுகமாகவுள்ள தனது புதிய ஸ்மார்ட்போனான 'விவோ S1' ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவை ஆப்லைன் கடைகளில் துவங்கியுள்ளது இந்த சீன பெருநிறுவனம். ஆகஸ்ட் 7 வரை நடைபெறவுள்ள இந்த முன்பதிவில் வாடிக்கையாளர்கள் 2,000 ரூபாய் செலுத்தி இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவை செய்து கொள்ளலாம் என கிஷ்மோசீனா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விவோ நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை, அதே நேரம் இந்த செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலுக்கும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
இது குறித்து கிஷ்மோசீனா வெளியிட்ட தகவலில் "4GB RAM + 128GB சேமிப்பு அளவை கொண்ட 'விவோ S1' ஸ்மார்ட்போன் மட்டுமே முன்பதிவிற்காக வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்றாலும், இந்தோனேசியாவில் அறிமுகமான விலையிலேயேதான் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்தோனேசியாவில் அறிமுகமான இந்த 'விவோ S1' ஸ்மார்ட்போன் 3,599,000 இந்தோனேசிய ரூபாய் (17,800 இந்திய ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகியிருந்தது. இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM + 128GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பச்சை (Cosmic Green0 மற்றும் நீலம் (Skyline Blue) என இரு வண்ணங்களில் அறிமுகமானது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன், விவோ S1 Pro ஸ்மார்ட்போனுடன் மார்ச் மாதமே சீனாவில் அறிமுகமாகியிருந்தது.
'விவோ S1' ஸ்மார்ட்போன் ஃபன்-டச் ஓ.எஸ் 9 (Funtouch OS 9) உடன், ஆண்ட்ராய்டு 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 6.38 FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), வாட்டர்-டிராப் ஸ்டைல் நாட்ச் திரை பொன்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P65 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
3 பின்புற கேமராக்களைக் கொண்டுள்ள 'விவோ S1' ஸ்மார்ட்போன், 16 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாவது கேமராவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 32 மெகாபிக்சல் அளவிலான செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன், வை-ஃபை, ப்ளூடூத் v5, மைக்ரோ USB, GPS உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. 4,500mAh அளவிலான பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த 'விவோ S1' ஸ்மார்ட்போனில், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது என்பது தனி சிறப்பு.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Vivo X500 Pro Max Reportedly Bags 3C Certification, Charging Speed Revealed
CD Projekt Red Confirms Layoffs at Project Sirius Witcher Multiplayer Spinoff