இந்தோனேசியாவில் இந்த 'விவோ S1' ஸ்மார்ட்போன் 3,599,000 இந்தோனேசிய ரூபாய் (18,000 இந்திய ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகியிருந்தது.
விவோ S1 Pro ஸ்மார்ட்போனுடன் மார்ச் மாதமே சீனாவில் அறிமுகமாகியிருந்தது. 'விவோ S1': சிறப்பம்சங்கள்!
கடந்த மார்ச் மாதத்தில் சீனாவில் அறிமுகமான 'விவோ S1' ஸ்மார்ட்போன், இன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இந்தியாவில் 'விவோ S1' ஸ்மார்ட்போனின் சர்வதேச வகையே அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சென்ற மாதம் இந்தோனேசியாவில் அறிமுகமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 6.38-இன்ச் FHD+ திரை, 4,500mAh அளவிலான பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ P65 எஸ் ஓ சி ப்ராசஸர் என பல சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது
'விவோ S1' ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு இன்று மாலை 4:30 மணிக்கு துவங்கவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்றாலும், இந்தோனேசியாவில் அறிமுகமான விலையிலேயேதான் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்தோனேசியாவில் அறிமுகமான இந்த 'விவோ S1' ஸ்மார்ட்போன் 3,599,000 இந்தோனேசிய ரூபாய் (18,000 இந்திய ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகியிருந்தது.
இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM + 128GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பச்சை (Cosmic Green0 மற்றும் நீலம் (Skyline Blue) என இரு வண்ணங்களில் அறிமுகமானது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன், விவோ S1 Pro ஸ்மார்ட்போனுடன் மார்ச் மாதமே சீனாவில் அறிமுகமாகியிருந்தது.
'விவோ S1' ஸ்மார்ட்போன் ஃபன்-டச் ஓ.எஸ் 9 (Funtouch OS 9) உடன், ஆண்ட்ராய்டு 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 6.38 FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), வாட்டர்-டிராப் ஸ்டைல் நாட்ச் திரை பொன்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P65 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
3 பின்புற கேமராக்களைக் கொண்டுள்ள 'விவோ S1' ஸ்மார்ட்போன், 16 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாவது கேமராவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 32 மெகாபிக்சல் அளவிலான செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன், வை-ஃபை, ப்ளூடூத் v5, மைக்ரோ USB, GPS உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. 4,500mAh அளவிலான பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த 'விவோ S1' ஸ்மார்ட்போனில், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது என்பது தனி சிறப்பு.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung's One UI 8.5 Beta Update Rolls Out to Galaxy S25 Series in Multiple Regions
Elon Musk Says Grok 4.20 AI Model Could Be Released in a Month